500 ஆண்டுகளுக்கு பின் உருவாகப் போகும் 3 ராஜ யோகங்கள் காரணமாக 3 ராசிகளுக்கு நற்பலன்கள் கிடைக்கும்..
ஜோதிடத்தில் கிரக பெயர்ச்சி என்பது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.. கிரகங்கள் ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு நகர்வதே கிரக பெயர்ச்சி என்று அழைக்கப்படுகிறது. இந்த கிரக மாற்றங்கள் மனித வாழ்க்கையில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று நம்பப்படுகிறது.
அந்த வகையில் ஜூலை 16 ஆம் தேதி கடகத்தில் சூரியனும் புதனும் இணைவதால், புதாதித்ய ராஜயோகம் உருவாகிறது. அதே போல், ஜூலை 26 ஆம் தேதி மிதுனத்தில் குருவும் சுக்கிரனும் இணைவதால் கஜலட்சுமி ராஜயோகம் உருவாகிறது.. மேலும் சுக்கிரன் அதன் சொந்த ராசியான ரிஷபத்தில் இருப்பதால் மாலவ்ய ராஜயோகம் ஆகியவை உருவாகும்.. 500 ஆண்டுகளுக்குப் பிறகு, இந்த அனைத்து கிரகங்களும் ஒன்றிணைந்து 3 சுப ராஜயோகங்களை உருவாக்குகின்றன. இது 3 ராசிக்காரர்களுக்கு மிகவும் அதிர்ஷ்டமானதாக இருக்கும் என்று நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
தனுசு: 3 ராஜயோகங்களின் சேர்க்கை தனுசு ராசிக்காரர்களுக்கு மிகவும் நன்மை பயக்கும்.. திருமண வாழ்க்கை அற்புதமாக இருக்கும். திருமணமாகாதவர்களுக்கு திருமணம் நடைபெறும்.. வாழ்க்கைத் துணைக்கு பதவி உயர்வு கிடைக்கலாம். ஊழியர்களுக்கு புதிய வேலை வாய்ப்புகள் கிடைக்கலாம். தொழில் முன்னேற்றம் கிடைக்கும்.. எதிர்பாராத பண வரவு, அதிர்ஷடம் கிடைக்கும். பழைய நோய்களிலிருந்து நிவாரணம் பெறலாம். ஆரோக்கியம் மேம்படும். பெற்றோரிடமிருந்து ஆதரவு கிடைக்கும்.
மிதுனம்: 3 ராஜயோகங்கள் மிதுன ராசிக்காரர்களுக்கு நன்மை பயக்கும். நம்பிக்கை அதிகரிக்கும். நீங்கள் உள்நாட்டு அல்லது வெளிநாட்டு பயணத்திற்கு செல்லலாம். வேலையில் புதிய வாய்ப்புகளைப் பெறலாம். பணத்தைச் சேமிப்பதில் வெற்றி பெறுவீர்கள். இந்த காலகட்டத்தில் நீங்கள் வீடு அல்லது வாகனம் போன்றவற்றை வாங்குவீர்கள்.. பண வரவுக்கு பஞ்சம் இருக்காது. சமூகத்தில் மரியாதை மற்றும் கௌரவம் அதிகரிக்கும்
கடகம்: மூன்று ராஜயோகங்கள் உருவாகுவது கடக ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டத்தை அளிக்கும். வணிகம் மற்றும் தொழிலில் வளர்ச்சி காணப்படலாம். தொழில், கல்வி மற்றும் திருமண வாழ்க்கையில் பல நல்ல பலன்கள் கிடைக்கும். உறவுகளில் இனிமை அதிகரிக்கும்.. உறவில் இருந்த மனக்கசப்புகள் நீங்கும்.. எனினும் பொறுமையாக இருப்பது நல்லது. பொறுமையாக இருங்கள். தடைபட்ட வேலைகள் வேகம் பெறும். திட்டங்கள் பணிகள் வெற்றி பெறும்.. சமூகத்தில் மரியாதை அதிகரிக்கும்..