‘ஒலியின் வேகத்தை விட 3 மடங்கு அதிகம்’: அடுத்த தலைமுறை அணுசக்தியால் இயங்கும் ஏவுகணை.. புடின் சொன்ன முக்கிய தகவல்..!

68581a9bd83a6 putin had previously offered to mediate the israel iran crisis but us president donald trump publ 220037378 16x9 1

அமெரிக்கா அணு ஆயுத சோதனைகளை மீண்டும் தொடங்கினால், ரஷ்யாவும் அதேபோல் சோதனைகளை மீண்டும் தொடங்கும் வாய்ப்பை பரிசீலிக்கும் என்று ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் தெரிவித்தார். அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அணு சோதனைகள் குறித்த கருத்துகளை வெளியிட்டதையடுத்து, புடின் ரஷ்ய தேசிய பாதுகாப்பு குழு கூட்டத்தைக் கூட்டினார்.


அணு சோதனைகளுக்கான ஆய்வும் தயாரிப்பும்

இந்த விவகாரம் குறித்த தகவல்களை சேகரித்து, ரஷ்யா அணு ஆயுத சோதனைக்கு தயாராகும் பணிகளைத் தொடங்க வேண்டிய அவசியம் குறித்து முன்மொழிவுகள் அளிக்கவும் பாதுகாப்புத் துறை, வெளிவிவகார அமைச்சகம், மற்றும் பாதுகாப்பு சேவைகள் ஆகியவற்றிற்கு புடின் உத்தரவிட்டார்.

புதிய தலைமுறை அணு இயக்கக் க்ரூஸ் ஏவுகணைகள்

ரஷ்ய அதிபர் மாளிகையான க்ரெம்ளினில் நடைபெற்ற ஆயுத மேம்பாட்டு நிபுணர்களுக்கான விருது வழங்கும் விழாவில் பேசிய புடின் “புதிய தலைமுறை அணு இயக்க ஏவுகணைகளின் வேகம் ஒலியின் வேகத்தைவிட மூன்று மடங்கு அதிகமாக இருக்கும். எதிர்காலத்தில், அவை ஹைப்பர்சோனிக் (Hypersonic) ஆக மாறும்,” எனத் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து பேசிய புடின் “ புதிய ஆயுத அமைப்புகள், பாதுகாப்புத் துறை மேம்பாடு, ரஷ்ய இராணுவம் மற்றும் கடற்படைக்கு உயர் தர ஆயுதங்கள் மற்றும் வாகனங்களை வழங்கும் திட்டங்கள் அனைத்தும் வெற்றிகரமாக நடைமுறையில் உள்ளன. அவாங்கார்ட் (Avangard) எனப்படும் மூலோபாய ஏவுகணை அமைப்பு தற்போது செயல்பாட்டில் உள்ளது. ஒரெஷ்னிக் (Oreshnik) நடுத்தர தூர ஏவுகணை அமைப்பு மொத்த உற்பத்தியில் தொடங்கப்பட்டுள்ளது. அண்டார்காண்டினென்டல் பாலிஸ்டிக் மிசைல்கள் (ICBMs) மற்றும் நீர்மூழ்கிக் கப்பல் ஏவுகணைகள் ஆகியவற்றிலும் மேம்பட்ட போர்த்தலைகள் பொருத்தப்பட்டுள்ளன.” என்று கூறினார்..

அணு ஆயுத விஞ்ஞானிகளுக்கு விருதுகள்

ரஷ்யாவின் அணு சக்தி வாய்ந்த Burevestnik ஏவுகணை, Poseidon மனிதமற்ற நீர்மூழ்கி வாகனம் (unmanned underwater vehicle) இவற்றை உருவாக்கிய விஞ்ஞானிகள் மற்றும் பொறியாளர்களுக்கு புடின் விருதுகளை வழங்கினார்.

தொடர்ந்து பேசிய அவர் “இந்த அணு திறன் கொண்ட ஆயுதங்கள் ரஷ்யாவுக்கு மட்டுமல்ல, முழு 21ஆம் நூற்றாண்டிற்கும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தவை. Burevestnik – உலகின் சக்திவாய்ந்த ஏவுகணை ஆகும்.. இதுதிறன்களை நிரூபித்துள்ளது.
அதன் பறக்கும் தூரம், உலகில் அறியப்பட்ட எந்த ஏவுகணை அமைப்பையும் மீறியுள்ளது.. அக்டோபர் 21 அன்று Burevestnik சோதனை நடந்த பகுதியில் ஒரு நேட்டோ கப்பல் இருந்தது. ஆனால் ரஷ்யா அதன் செயல்பாடுகளில் தலையிடவில்லை,” என்று புடின் குறிப்பிட்டார்.

Poseidon & Khabarovsk – புதிய கடற்படை சக்திகள்

Burevestnik-க்கு அப்பால், ரஷ்யா சமீபத்தில் Poseidon எனும் அணு சக்தி கொண்ட நீர்மூழ்கி ட்ரோனை சோதனை செய்தது. மேலும் Khabarovsk எனும் புதிய அணு நீர்மூழ்கிக் கப்பலையும் அறிமுகப்படுத்தியது — இது Poseidon ஆயுதங்களை ஏவுவதற்காகவே வடிவமைக்கப்பட்டது.

Poseidon ட்ரோன் அமைப்பு, மிக ஆழமான நீரில் இயங்கும் திறன், நவீன டார்பிடோக்களை விட அதிக வேகம், மற்றும் அண்டார்காண்டினென்டல் தூரங்களை கடக்கக்கூடிய திறன் கொண்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

எனவே அமெரிக்கா அணு சோதனைகள் மீண்டும் தொடங்கினால் மட்டுமே, அதேபோல நடவடிக்கை எடுக்கலாம் என ரஷ்யா தெரிவித்துள்ளது.. அதே நேரத்தில், புதிய தலைமுறை அணு இயக்க ஏவுகணைகள், நீர்மூழ்கிக் கப்பல்கள், மற்றும் ட்ரோன் ஆயுதங்கள் ஆகியவற்றில் மிகுந்த முன்னேற்றம் எட்டியுள்ளது. இந்த ஆயுதங்கள் ரஷ்யாவின் 21ஆம் நூற்றாண்டுக்கான பாதுகாப்பு அடையாளம் என்றும் புடின் தெரிவித்துள்ளார்..

Read More : “வரிகள் தான் அதை செய்தது..” இந்தியா – பாகிஸ்தான் போர்.. புதிய தகவலை சொன்ன ட்ரம்ப்..!

RUPA

Next Post

இரவு தூங்கச் செல்லும் முன் வெதுவெதுப்பான நீரில் குளிப்பதால் இத்தனை நன்மைகளா..? இனி நீங்களும் ஃபாலோ பண்ணுங்க..!

Thu Nov 6 , 2025
பகல் முழுவதும் உழைத்தபின், இரவில் குளித்துவிட்டுப் படுக்கைக்குச் செல்லும் பழக்கம் பலரிடம் உண்டு. சுகாதார நிபுணர்களின் கூற்றுப்படி, இரவு குளியலில் நாம் பயன்படுத்தும் நீரின் வெப்பநிலை மிக முக்கியமானது. குளிர்ந்த நீரைத் தவிர்த்து, வெதுவெதுப்பான நீரைப் பயன்படுத்துவது உடல் ஆரோக்கியத்திற்கும், ஆழ்ந்த தூக்கத்திற்கும் சிறந்தது என்று அவர்கள் வலியுறுத்துகின்றனர். இரவில் வெதுவெதுப்பான நீரில் குளிப்பது உங்கள் உடலில் ஏற்பட்ட அசதி, மனச் சோர்வு ஆகியவற்றைப் போக்கி, ஒரே நொடியில் புத்துணர்ச்சி […]
bathing 11zon

You May Like