தவெகவின் 2-வது மாநில மாநாடு மதுரை, பாரபத்தியில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. சுமார் 2 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் கலந்து கொண்டனர்.. இந்த மாநாட்டில் பங்கேற்பதற்காக வெயிலை கூட பொருட்படுத்தாமல் காலை முதலே தொண்டர்கள் குவிந்தனர். தொண்டர்களின் பாதுகாப்பு வசதிக்காக 500 ஏக்கர் பரப்பளவில் பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டி இருந்தது.
இந்த மாநாட்டில் விஜய்யின் அப்பா எஸ்.ஏ.சந்திரசேகர், தாயார் ஷோபா ஆகியோர் வருகை தந்துள்ளனர். முன்னதாக மாநாட்டிற்கு கர்ப்பிணிகள், குழந்தைகள் யாரும் வர வேண்டாம் என தவெக தலைவர் விஜய் அறிவுறுத்தியிருந்தார். அதனையும் மீறி மாநாட்டிற்கு வந்த குழந்தைகளை பாதுகாப்பான இடத்திற்கு பவுன்சர்கள் அழைத்து சென்றனர்.
குறிப்பாக குடிநீர் வசதி, பார்கிங் வசதி, மருத்துவ வசதி, ஆம்புலன்ஸ் வசதி, கழிவறை வசதி உணவு, 500க்கும் மேற்பட்ட மருத்துவர்கள் 10 ஆயிரத்திற்கும் அதிகமான பாதுக்காப்பு காவலர்கள் உள்ளிட்டவை மிகவும் பிரம்மாண்ட முறையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதனையடுத்து மாநாடு கூட்டத்திற்கு வருகை தந்த தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் தொண்டர்களுக்கு இடையே அமைக்கப்பட்டிருந்த ’’ரேம்ப் வாக்’’கில் நடந்து சென்றார்.
விஜய் ரேம்ப் வாக் செல்லும் வழியில் தொண்டர்கள் விஜய்க்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். கட்சியின் கொள்கை பாடலுக்கு பின் தவெக தலைவர் விஜய் கட்சியின் கொடியை ஏற்றினார். பின்னர் தொண்டர்கள் இடையே உரையாற்றினார். அப்போது திமுக தன்னுடைய அரசியல் எதிரி என்று கடுமையாக விமர்சித்தார்.
இதனிடையே மதுரையில் நடந்த தவெக மாநாட்டில் மூச்சு திணறியும், பேனர் வைத்த போது மின்சாரம் தாக்கியும், விபத்தில் சிக்கியும் 3 தவெக தொண்டர்கள் உயிரிழந்தனர். ஆனால் அககட்சியில் தலைவர் விஜய் ஒரு இரங்கல் கூட தெரிவிக்காதது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. கடந்தாண்டு விக்கிரவாண்டியில் நடந்த முதல் மாநாட்டில் கூட்ட நெரிசலில் சிக்கி 6 பேர் உயிரிழந்தனர். அப்போதும் விஜய் இரங்கல் தெரிவிக்காத நிலையில் தொண்டர்களின் குடும்பத்தை பற்றி கவலை இல்லை என்ற பேச்சும் அடிபட்டது.
Read more: இறந்த பிறகு கால் விரல்கள் ஏன் கட்டப்படுகின்றன?. அப்படி கட்டவில்லையென்றால் என்ன நடக்கும்?.