பழம்பெரும் நடிகர் சரோஜா தேவி உடல்நலக்குறைவால் நேற்று (ஜூலை 14) காலையில் பெங்களூருவில் உள்ள மருத்துவமனையில் காலமானார். அவருக்கு வயது 87. படப்பிடிப்பில் ஒழுங்கு, காலம் தவறாமை ஆகியவற்றுக்குப் புகழ்பெற்ற சரோஜாதேவி அன்றைய நாயகியரில் அதிக சம்பளம் வாங்கியவர் என்ற பெருமையும் கொண்டவர். அவர் பற்றிய சுவாரஸ்ய தகவல்களை இந்த பதிவில் பார்க்கலாம்
அபிநயா சரஸ்வதி, கன்னடத்து பைங்கிளி என ரசிகர்களால் அன்போடு அழைக்கப்பட்டவர் சரோஜாதேவி. . தமிழ், கன்னடம், தெலுங்கு, இந்தியில் 200க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கிறார். தமிழில் உச்ச நட்சத்திரமாக இருந்த எம்ஜிஆர் உடன் முதல் படத்தில் நடித்தார். அதற்குப் பிறகு எம்ஜிஆர் உடன் மட்டும் 26 படங்கள் நடித்திருக்கிறார். நடிகர் திலகம் என அழைக்கப்படும் சிவாஜி கணேசனுடன் 22 படங்களில் நடித்தார்.
கிட்டத்தட்ட 200-க்கும் மேற்பட்ட திரைப்படங்களை வெறும் 15 ஆண்டுகளில் நடித்தவர் தான் சரோஜாதேவி. இப்போது எல்லாம் ஒரு படம் முடித்து விட்டு தான் நாயகிகள் அடுத்த படத்தை ஆரம்பிப்பார்கள். ஆனால் ஒரே நேரத்தில் 30 படங்களில் நடித்தவர் சரோஜாதேவி என்கின்றனர். ஒரு நாளைக்கு 18 மணி நேரம் சூட்டிங்கில் இருப்பாராம். ஒரு படத்திற்கு மூன்று மணி நேரம் நான்கு மணி நேரம் எனக் கூட கால் சீட் கொடுத்ததாக கூறுகின்றனர்.
எம்ஜிஆரே சரோஜாதேவியின் வரவுக்காக படப்பிடிப்பு தளத்தில் காத்துக்கொண்டிருப்பாராம். சினிமா சூப்பர் ஸ்டார்கள், இமாலய இயக்குநர்களுடன் பணிபுரிந்தாலும் இதுவரை எந்தவித சர்ச்சையிலும் சிக்காதவர். குறிப்பாக பல முன்னணி நடிகர்கள் சரோஜாதேவியை காதலிப்பதாகவும் அவரைத் திருமணம் செய்து கொள்வதாகவும் கூறி இருக்கின்றனர். ஆனால் யாருடைய காதலையும் ஏற்றுக் கொள்ளவில்லை.
திரைத்துறையைச் சேர்ந்தவரை திருமணம் செய்து கொள்ளாதது ஏன் என சரோஜா தேவி ஒரு நேர்காணலில் பகிர்ந்துள்ளார். அது என்னவென்றால் சினிமாவுக்கு வருவதற்கு முன்னாலேயே கலைத்துறையில் இருந்து வரும் நபர்களை நான் திருமணம் செய்யக்கூடாது. உனக்கு பின்பும் குழந்தைகள் இருக்கிறார்கள். என எங்க அம்மா சொன்னார். அதன் காரணமாகவே நான் திரைத்துறையைச் சேர்ந்தவர்களை காதலிக்கவில்லை என்றார்.
Read more: பள்ளி குடிநீர் தொட்டியில் மலத்தை கலந்த மர்ம நபர்கள்.. மீண்டும் ஒரு வேங்கைவயல் சம்பவம்..!