அடுத்த Layoff..! 30,000 பேர் பணி நீக்கம் செய்யும் அமேசான்..! யார் பாதிக்கப்படுவார்கள்? கலக்கத்தில் ஊழியர்கள்..!

layoff amazon

உலகின் முன்னணி இ-காமர்ஸ் மற்றும் டெக் நிறுவனமான அமேசான், அடுத்த வாரம் மீண்டும் வேலைக்குறைப்பை (layoffs) தொடங்க தயாராகி வருகிறது. கார்ப்பரேட் பணியாளர்களில் சுமார் 30,000 பேரை குறைக்கும் திட்டத்தின் ஒரு பகுதியாக இது மேற்கொள்ளப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.. இந்த வேலைக் குறைப்புகள் செவ்வாய்க்கிழமைக்குள் தொடங்கக்கூடும் என்றும், கடந்த ஆண்டு அறிவிக்கப்பட்ட குறைப்புகளின் அளவுக்கு சமமாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது.


2026ல் புதிய வேலைக் குறைப்பு – எந்த பிரிவுகள் பாதிக்கப்படலாம்?

கடந்த ஆண்டு அக்டோபரில், அமேசான் ஏற்கனவே சுமார் 14,000 வெள்ளைக் காலர் (white-collar) பணியாளர்களை பணிநீக்கம் செய்தது. இதுவரை இந்த விவகாரம் குறித்து அமேசான் எந்த அதிகாரப்பூர்வ கருத்தையும் வெளியிடவில்லை. இந்த சூழலில், தற்போது 2-வது சுற்று வேலைக் குறைப்புகள் தொடங்கவுள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது. இதில் மேலும் சுமார் 16,000 வேலைகள் குறைக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.

இந்த வரவிருக்கும் குறைப்புகள், அமேசானின் முக்கிய பிரிவுகளை பாதிக்கக்கூடும். அதில்:

அமேசான் வெப் சர்வீசஸ் (AWS)

நிறுவனத்தின் சில்லறை (Retail) வணிகம்

பிரைம் வீடியோ (Prime Video)

மனித வளப் பிரிவு (Human Resources), இது அந்நிறுவனனத்திற்குள் “People Experience and Technology” என அழைக்கப்படுகிறது.

ஆனால், பண நீக்கத்தின் முழு அளவு குறித்த தகவல் இன்னும் தெளிவாக இல்லை என்றும், திட்டங்கள் மாற்றமடையலாம் என்றும் எச்சரித்துள்ளனர்.

அமேசானின் மொத்த ஊழியர் எண்ணிக்கை

தற்போது, அமேசான் உலகம் முழுவதும் சுமார் 1.58 மில்லியன் (15.8 லட்சம்) பேரை பணியில் வைத்துள்ளது. இவர்களில் பெரும்பாலானோர் களஞ்சியங்கள் (warehouses) மற்றும் விநியோக மையங்களில் (fulfilment centres) பணிபுரிகின்றனர். திட்டமிட்டுள்ள 30,000 வேலைக் குறைப்பு, மொத்த ஊழியர் எண்ணிக்கையில் சிறிய பகுதியே ஆனாலும், கார்ப்பரேட் பணியாளர்களில் சுமார் 10 சதவீதம் ஆகும்.

இந்த குறைப்புகள் முழுமையாக நடைமுறைப்பட்டால், இது அமேசானின் 30 ஆண்டுகால வரலாற்றிலேயே மிகப் பெரிய வேலைக் குறைப்பாக இருக்கும். இதற்கு முன்பு, 2022 ஆம் ஆண்டில் அமேசான் சுமார் 27,000 வேலைகளை குறைத்திருந்தது.

முன்னைய குறைப்புகளில் ஊழியர்களுக்கு வழங்கப்பட்ட அவகாசம்

அக்டோபரில் பணிநீக்கம் செய்யப்பட்ட ஊழியர்களுக்கு, 90 நாட்கள் அமேசான் நிறுவனத்தின் சம்பளப் பட்டியலில் தொடர்வார்கள் என்று அறிவிக்கப்பட்டது. அந்த காலத்தில், அவர்கள் நிறுவனத்திற்குள் வேறு வேலைகளுக்கு விண்ணப்பிக்கவும் அல்லது வெளியில் வேறு வேலை தேடவும் அனுமதி அளிக்கப்பட்டது. அந்த 90 நாள் அவகாசம் வரும் திங்கட்கிழமை முடிவடைய உள்ளது.

ஏன் அமேசான் வேலைகளை குறைக்கிறது?

அக்டோபரில் வேலைக் குறைப்புகளை அறிவித்த போது, அமேசான் அதற்கு செயற்கை நுண்ணறிவு (AI) வளர்ச்சியையே காரணமாகக் கூறியது. அந்த நேரத்தில் வெளியான உள் கடிதத்தில், “இந்த தலைமுறை AI, இணையத்திற்குப் பிறகு நாம் பார்த்த மிகப் பெரிய மாற்றத்தைக் கொண்டு வரும் தொழில்நுட்பம். இது நிறுவனங்களுக்கு இதுவரை இல்லாத வேகத்தில் புதுமைகளை செய்ய உதவுகிறது,” என்று அமேசான் தெரிவித்திருந்தது.

பல பெரிய நிறுவனங்கள் செலவுகளை குறைக்கவும், மனித உழைப்பை குறைத்து தானியங்கி முறைகளை (automation) அதிகரிக்கவும், AI-யை பயன்படுத்தி மென்பொருள் குறியீடு (software code) எழுதுதல் மற்றும் வழக்கமான பணிகளை தானியங்கியாக்கி வருகின்றன. அமேசானும் தனது சொந்த AI கருவிகள் மற்றும் மாடல்களை தீவிரமாக விளம்பரப்படுத்தி வருகிறது. கடந்த டிசம்பரில் நடந்த அதன் வருடாந்திர AWS கிளவுட் கம்ப்யூட்டிங் மாநாட்டிலும் இதை வலியுறுத்தியது.

ஆனால் CEO வேறு காரணம் சொல்கிறார்

இருப்பினும், அமேசான் தலைமை நிர்வாக அதிகாரி (CEO) ஆண்டி ஜாஸ்ஸி (Andy Jassy) பின்னர் வேறு விளக்கத்தை அளித்தார். நிறுவனத்தின் மூன்றாம் காலாண்டு வருமான அறிக்கை (earnings call) தொடர்பாக ஆய்வாளர்களிடம் பேசிய போது, இந்த வேலைக் குறைப்புகள் “முழுவதும் நிதி காரணங்களாலோ அல்லது AI காரணங்களாலோ அல்ல” என்று அவர் கூறினார்.

மாறாக, இது நிறுவனத்தின் கலாச்சாரம் தொடர்பான பிரச்சனை என்றார் அவர்.
“இது கலாச்சாரம் தான்,” என்று ஜாஸ்ஸி கூறினார். மேலும் “அமேசான் மிக அதிகமாக நிர்வாக ரீதியாக (bureaucratic) மாறிவிட்டது. முன்பை விட அதிகமான மனிதர்கள் இருக்கிறார்கள், மேலும் அதிகமான நிர்வாக அடுக்குகள் உருவாகிவிட்டன,” என்றும் அவர் விளக்கியார்.

அமேசானின் இந்த புதிய வேலைக் குறைப்பு திட்டம், உலகளாவிய டெக் துறையில் நிலவும் மாற்றங்களைப் பிரதிபலிக்கிறது. AI வளர்ச்சி, செலவுக் கட்டுப்பாடு மற்றும் நிறுவன கலாச்சார மாற்றம் ஆகியவை இந்த முடிவுக்கு முக்கிய காரணங்களாக பார்க்கப்படுகின்றன. வரும் நாட்களில் இந்த வேலைக் குறைப்புகள் எவ்வாறு நடைமுறைப்படுத்தப்படுகின்றன என்பதையும், எந்த பிரிவுகள் அதிகம் பாதிக்கப்படுகின்றன என்பதையும் உலகம் கவனித்து வருகிறது.

RUPA

Next Post

“ஊழல் திமுக அரசுக்கு விடை கொடுக்கும் காலம் வந்துவிட்டது..” இன்று தமிழகம் வரும் நிலையில் பிரதமர் மோடி தமிழில் பதிவு..!

Fri Jan 23 , 2026
பரபரப்பான அரசியல் சூழலில் பிரதமர் மோடி இன்று தமிழ்நாடு வருகிறார்.. சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு தேசிய ஜனநாயக கூட்டணியின் மாபெரும் பொதுக்கூட்டம் செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தில் பிரம்மாண்டமாக நடைபெற உள்ளது.. இந்த பொதுக் கூட்டத்தில் கலந்து கொள்ளும் மோடி அதில் உரையாற்ற உள்ளார். கேரளாவின் திருவனந்தபுரம் விமான நிலையத்திலிருந்து பிற்பகல் 2:15 மணிக்கு ஒரு சிறப்பு விமானத்தில் புறப்பட்டு சென்னை பழைய விமான நிலையத்தில் பிரதமர் மோடி தரையிறங்குவார். பின்னர், […]
stalin modi

You May Like