சிங்கப்பூரைச் சேர்ந்தவர் ஜூ பென் வி. இவர் அந்த பகுதியில் பிரபல டாக்டராக உள்ளார். இந்த நிலையில் இவர் மீது கடந்த 2020-ஆம் வருடம் ஒரு பெண் தனது அந்தரங்க வீடியோக்களை அவர் வைத்திருப்பதாக புகார் கொடுத்தார். எனவே அதிகாரிகள் அவரை விசாரித்தனர். அப்போது அவரது ஷூவில் இரகசிய கேமரா ஒன்றை பொருத்தி, ஹாஸ்பிடல், மால்கள், கல்லூரிகள், ரெயில் நிலையம் என பெண்கள் அதிகம் கூடும் பொது இடங்களுக்கு சென்று அவர்களது வீடியோக்களை பதிவு செய்துள்ளார்.
மேலும் அவர் குட்டைப்பாவாடை போடும் பெண்களை குறிவைத்து அவர்களது அந்தரங்க வீடியோக்களை எடுத்து வந்ததுள்ளார். இதை தொடர்ந்து அவரது அறையில் ஆய்வு மேற்கொண்ட போது சுமார் 3200-க்கும் அதிகமான பெண்களின் அந்தரங்க வீடியோக்கள் பறிமுதல் செய்யப்பட்டது. அதன் பின்னர் அந்த டாக்டருக்கு மூன்று வருடங்கள் சிறை தண்டனை கிடைத்தது. இந்நிலையில் தற்போது அவரது பெயர் டாக்டர்கள் பதிவேட்டில் இருந்து நீக்கப்பட்டு விட்டதாக சிங்கப்பூர் மருத்துவக் கவுன்சிலுக்கான (எஸ்எம்சி) ஒழுங்குமுறை தீர்ப்பாயம் தெரிவித்துள்ளது.
எனவே அந்த டாக்டரின் லைசென்ஸ் ரத்து செய்யப்பட்டுள்ளது. இது குறித்து தெரிவித்துள்ள எஸ்எம்சி பல சந்தர்ப்பங்களில் இதுமாதிரியான குற்றச்செயல்களில் ஈடுபட்ட மருத்துவர் ஒருவரை தொடர்ந்து தொழில் ரீதியில் அனுமதிப்பது மக்கள் மத்தியில் எதிர்மறை விமர்சனங்களை உருவாக்கும். அதனால் அவரது லைசென்ஸ் ரத்து செய்யப்படுகிறது எனக் குறிப்பிட்டுள்ளது