சோகம்!. தேவாலயத்தில் கட்டடம் இடிந்து விழுந்ததில் 36 பேர் பலி!. 200 பேர் படுகாயம்!. எத்தியோப்பியாவில் சோகம்!

ethiopia church 36 kills

எத்தியோப்பியா தேவாலயத்தில் உள்ள கட்டடத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்த விபத்தில் 36 பேர் பலியாகினர். 200க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.


கிழக்கு ஆப்ரிக்க நாடான எத்தியோப்பியாவி ன் தலைநகரான அடிஸ் அபாபாவில் இருந்து 70 கி.மீ., தொலைவில் அம்ஹாரா பிராந்தியத்தில் அரெர்டி நகரம் உள்ளது. இந்நகரில் உள்ள மென்ஜார் ஷென்கோரா அரெர்டி மரியம் சர்ச்சில், ஆண்டுதோறும் மதவிழா நடைபெறுவது வழக்கம். நேற்று முன்தினம் நடந்த விழாவில் பங்கேற்க ஏராளமானோர் கூடியிருந்தனர். இந்நிலையில், அந்த சர்ச்சில் மறு சீரமைப்புக்காக தற்காலிகமாக அமைக்கப்பட்டிருந்த மர சாரம் திடீரென இடிந்து விழுந்தது.

அப்போது அங்கிருந்த பலர், இடிபாடுகளில் சிக்கிக் கொண்டனர். இதில், 36 பேர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. மேலும், 200க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். இந்த விபத்தை நேரில் பார்த்த மகியாஸ் என்பவர் கூறியதாவது, நாங்கள் அனைவரும் பிரார்த்தனை செய்ய கூடியிருந்தோம். அப்போது திடீரென தேவாலயத்தில் கட்டுமான பணி நடந்து ஒரு பகுதி இடிந்து விழுந்தது என்றார்.

Readmore: காஞ்சிபுரம் உள்ளிட்ட 6 மாவட்டத்தில் வெளுக்க போகும் கனமழை…! மீனவர்கள் கடலுக்கு போக வேண்டாம்…!

KOKILA

Next Post

அதிமுக கூட்டத்திற்கும் திமுக அரசு பாதுகாப்பு கொடுக்கவில்லை...! இபிஎஸ் பரபரப்பு குற்றச்சாட்டு...!

Fri Oct 3 , 2025
163 தொகுதியில் மக்களை சந்தித்தேன், 5 முதல் 6 மாவட்டத்தில் தான் காவல் துறை பாதுகாப்பு கொடுத்தனர், மற்ற இடங்களில் நம்முடைய அதிமுக தொண்டர்கள், கூட்டணிக் கட்சித் தொண்டர்கள் தான் பாதுகாப்பு கொடுத்தனர் என எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார். மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம் என்பதை வலியுறுத்தி அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி மாநிலம் முழுவதும் பிரச்சாரப் பயணம் மேற்கொண்டு வருகிறார். நேற்று தருமபுரியில் பேசிய அவர்; கரூரில் செப்டம்பர் […]
EPS ambulance new

You May Like