புலனாய்வுத்துறையில் 362 காலிப்பணியிடங்கள்.. 10-ம் வகுப்பு முடித்தவர்களுக்கு செம சான்ஸ்..! மிஸ் பண்ணிடாதீங்க..

job2

மத்திய அரசின் புலனாய்வுப் பிரிவில் 10-ம் வகுப்பு படித்தவர்களுக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. பொதுப் பிரிவில் பல்நோக்கு ஊழியர் (Multi Tasking Staff) பதவியில் மொத்தம் 362 காலிப்பணியிடங்கள் நிரப்பப்படுகிறது.


பணியிட விவரம்:

பல்நோக்கு பணியாளர் (MTS) – 362

வயது வரம்பு: 14.12.2025 தேதியின்படி, 18 முதல் 25 வயது வரை இருக்க வேண்டும். மத்திய அரசு விதிகளின்படி வயது வரம்பில் தளர்வுகள் உண்டு.

கல்வித்தகுதி: புலனாய்வுப் பிரிவு பல்நோக்கு பணியாளர் பதவிக்கு 10-ம் வகுப்பு தேர்ச்சி அல்லது நிகரான கல்வித்தகுதியை பெற்றிருக்க வேண்டும்.

சம்பளம்: தேர்வாகும் நபர்களுக்கு ரூ.18,000 முதல் ரூ.56,900 வரை சம்பளம் வழங்கப்படும். சிறப்பு பாதுகாப்பு தொகையாக அடிப்படை சம்பளத்தில் இருந்து 20 சதவீதம் வழங்கப்படும். மேலும் விடுமுறை நாட்களில் பணி செய்தால் அதற்கான தொகையும் வழங்கப்படும்.

தேர்வு செய்யப்படும் முறை: ஆட்சேர்ப்பு அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள இப்பணியிடங்களுக்கு மொத்தம் 2 கட்டத் தேர்வு நடைபெறும் என அதிகாரப்பூர்வ தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

முதல் கட்டத் தேர்வு – Objective Type

  • பொது விழிப்புணர்வு, நுண்ணறிவு, லாஜிக்கல் ரீஸனிங், ஆங்கிலம்
  • மொத்த மதிப்பெண் : 100
  • காலம் : 1 மணி நேரம்
  • நெகட்டிவ் மார்க்கிங் : 1/4

குறைந்தபட்ச தேர்ச்சி மதிப்பெண்கள்:

  • பொது பிரிவு – 30
  • OBC – 28
  • SC / ST – 25
  • EWS – 30

முதல் கட்டத் தேர்வில் நீங்கள் எடுத்த மதிப்பெண்களுக்கு ஒரு cut-off நிர்ணயிக்கப்படும். அந்த cut-off-ஐ தாண்டி மதிப்பெண் எடுத்தவர்கள் மட்டுமே இரண்டாம் கட்டத்தேர்வுக்கு செல்ல முடியும்.

இரண்டாம் கட்டத் தேர்வு – English Descriptive Test

  • பாடம் : ஆங்கிலம்
  • காலம் : 1 மணி நேரம்
  • மதிப்பெண் : 50
  • தகுதி மதிப்பெண் : 20
  • ஆங்கிலத்தில் எழுதும் திறன், புரிதல் திறன் போன்றவை விரிவாக சோதிக்கப்படும்.
  • இந்தத் தேர்வு தகுதித் தேர்வு (Qualifying) ஆகவே கணக்கிடப்படும்.

தேர்வு மையங்கள்: தமிழ்நாட்டின் முக்கிய 7 நகரங்களில் தேர்வு மையங்கள் அமைக்கப்படும்:

  • சென்னை
  • கோவை
  • மதுரை
  • சேலம்
  • திருச்சி
  • திருநெல்வேலி
  • வேலூர்

எப்படி விண்ணப்பிப்பது? பல்நோக்கு பணியாளர் பதவிக்கு விண்ணப்பிக்க விரும்பும் நபர்கள் https://www.mha.gov.in/ என்ற இணையதளத்தில் ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி நாள் : 14.12.2025

Read more: மீண்டும் ஆட்டத்தை தொடங்கிய செந்தில்பாலாஜி.. கொத்தாக திமுகவில் இணைந்த அதிமுக, தேமுதிகவினர்..!

English Summary

362 vacancies in the Intelligence Department.. Great opportunity for those who have completed 10th standard..!

Next Post

BREAKING| வீட்டுக்கு ஒருவர் கட்டாய பட்டப்படிப்பு.. தவெக தேர்தல் அறிக்கையின் முக்கிய அம்சங்கள் குறித்து விஜய் பேச்சு..!

Sun Nov 23 , 2025
Vijay has spoken about some of the key aspects of the TVK election manifesto.
vijay2

You May Like