“புருஷன் விட்டு போய்ட்டாரு.. ஆசையை அடக்க முடியல”..!! 15 வயது மாணவியுடன் உடலுறவு வைத்த 38 வயது பெண் ஆசிரியை..!!

Sex Court 2025

ஆஸ்திரேலியா விக்டோரியா மாகாணம் கிரான்போர்ன் வடக்கு பகுதியில் அமைந்துள்ள அல்கிரா மேல்நிலைப்பள்ளியில் 15 வயது மாணவியிடம், பெண் ஆசிரியை ஒருவர் ரகசிய பாலியல் உறவில் இருந்த சம்பவம் அதிர்ச்சியடைய வைத்துள்ளது. பெண் ஆசிரியையான லாரா ஆன் ஹிலுக்கு ஏற்கனவே திருமணம் ஆகி இரண்டு குழந்தைகள் உள்ளனர். 38 வயதான அந்த ஆசிரியை தற்போது சிறை தண்டனை அனுபவித்து வருகிறார்.


இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்திய காவல்துறை,“லாரா ஆன் ஹில் மாணவியிடம் உண்மையான காதல் உணர்வுகளைக் கொண்டிருந்துள்ளார். அதேபோல, அந்த மாணவிக்கும் ஆசிரியையின் மீது ஈர்ப்பு இருந்ததாக எங்களுக்குத் தெரிய வந்துள்ளது” என தெரிவித்துள்ளது.

கடந்த புதன்கிழமை நடைபெற்ற நீதிமன்ற விசாரணையின்போது, இருவருக்கும் இடையிலான உறவு குறித்து பல அதிர்ச்சி தகவல்கள் வெளிச்சத்திற்கு வந்தன. குறிப்பாக, இருவரும் நீண்ட தூர பயணங்கள் செய்துள்ளனர். இரவு நேரங்களில் பார்க்குகளில் தனியாக பலமுறை சந்தித்துள்ளனர். மேலும், லாராவின் இல்லத்திலும் அந்த மாணவி பல இரவுகளை தங்கியிருந்துள்ளார். ஒருமுறை அந்த மாணவியின் வீட்டுக்கு சென்று, லாராவும் மாணவியும் கஞ்சா புகைத்துள்ளனர். இந்த வழக்கில் குற்றத்தை ஒப்புக்கொண்ட ஆசிரியை, தான் செய்தது மிகப்பெரிய தவறு என மன்னிப்புக் கேட்டுள்ளார்.

லாரா குறித்த இந்த சம்பவம் அவருடைய குடும்ப வாழ்க்கையிலும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரம் வெளிவந்ததும் அவரது கணவர் அவரை விட்டு பிரிந்துவிட்டார். தற்போது, லாரா தனது 8 மற்றும் 4 வயதான குழந்தைகளுடன் தனியாக வாழ்ந்து வருகிறார். இந்த குற்றச்சாட்டுகளால், அவரது தனிநபர் வாழ்க்கை மட்டுமல்லாது, குடும்ப வாழ்க்கையும் பாதிக்கப்பட்டுள்ளது.

அதே சமயம், லாராவுக்கு மனநல குறைபாடு இருப்பதாகவும், இது அவருடைய சிந்தனை, உணர்ச்சி மற்றும் நடத்தையில் தீவிர மாற்றங்களை ஏற்படுத்தும் வகையில் பாதிப்பை ஏற்படுத்தும் என்று அவரது வழக்கறிஞர் கூறியுள்ளார். இரண்டு குழந்தைகள் பிறந்த பிறகு, லாரா மற்றும் அவரது கணவருக்கு இடையிலான உறவில் விரிசல் ஏற்பட்டதாகவும், அதன் விளைவாகவே லாரா மனநல பாதிப்பை எதிர்கொண்டதாகவும் அவரது வழக்கறிஞர் நீதிமன்றத்தில் வாதிட்டார். உறவில் விரிசல், தனிமை, புறக்கணிப்பு ஆகியவை காரணமாகத்தான் சிறுமியுடன் பாலியல் ரீதியாக உறவு வைத்துள்ளார்.

லாரா ஆன் ஹில் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்ட பின்னர், அவருக்கு ஜாமீன் வழங்கப்பட்டது. இருப்பினும், அவர் மாணவியுடன் தொடர்பை தொடர்ந்து வந்துள்ளார். இதையடுத்து லாராவை மீண்டும் போலீசார் கைது செய்து, சிறையில் அடைத்துள்ளனர். இந்த வழக்கில் ஆகஸ்ட் 15ஆம் தேதி லாராவுக்கு தண்டனை வழங்கப்பட உள்ளது. அவருக்கு குறைந்தபட்சம் 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது.

Read More : பல் துலக்கினால் மட்டும் போதுமா..? டூத் பிரஷை அந்த இடத்தில் வைக்கவே கூடாது..!! பெரும் ஆபத்து..!!

CHELLA

Next Post

“தவெக தான் முதன்மை சக்தி என்பதை மீண்டும் உணர்த்துவோம் .. மாநிலம் அதிர மாநாட்டிற்குத் தயாராவோம்..” விஜய் பரபரப்பு அறிக்கை..

Tue Aug 12 , 2025
TVK leader Vijay has said that we will prepare for the state convention and will once again make the world aware that we are the primary force.
7il2srfg actor vijay ani 625x300 28 October 24 1

You May Like