உத்தரகாண்டில் மேக வெடிப்பு காரணமாக ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் 4 பேர் பலி, 50 பேர் காணாமல் போயுள்ளனர்.
உத்தரகாண்டின் கீர் கங்கா நதியின் நீர்ப்பிடிப்புப் பகுதியில் இன்று பெரும் மேக வெடிப்பு ஏற்பட்டது. இந்த மேகவெடிப்பு, நிலச்சரிவு மற்றும் திடீர் வெள்ளத்தை தூண்டியது.. இதில் 4 பேர் உயிரிழந்தனர்.. பலர் காணாமல் போயிருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. உத்தரகாஷியில் உள்ள தரலி கிராமத்தை நோக்கி ஒரு மலையிலிருந்து பாயும் வெள்ள நீரில் பல வீடுகளை அடித்துச் செல்லும் வீடியோ காட்சிகள் வெளியாகின. நேரில் பார்த்தவர்கள் சமூக ஊடகங்களில் வீடியோக்களை வெளியிட்டனர்.. இந்த வீடியோவில் மக்கள் பீதியில் அலறுவதைக் கேட்கலாம்.
இந்த நிலையில் நிவாரணக் குழுக்கள் மீட்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளதாக உத்தரகாண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தாமி தெரிவித்துள்ளார்.. இதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர் “தாராளி (உத்தரகாஷி) பகுதியில் மேக வெடிப்பால் ஏற்பட்ட பெரும் சேதம் குறித்த செய்தி மிகவும் வருத்தமாகவும், வேதனையாகவும் உள்ளது. SDRF, NDRF, மாவட்ட நிர்வாகம் மற்றும் பிற தொடர்புடைய குழுக்கள் போர்க்கால அடிப்படையில் நிவாரணம் மற்றும் மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளன. இது தொடர்பாக, நான் மூத்த அதிகாரிகளுடன் தொடர்ந்து தொடர்பில் இருக்கிறேன், மேலும் நிலைமை உன்னிப்பாகக் கண்காணிக்கப்படுகிறது. அனைவரின் பாதுகாப்புக்காக கடவுளிடம் பிரார்த்தனை செய்கிறேன்,” என்று குறிப்பிட்டுள்ளார்..
உத்தரகண்ட் மாநிலத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது/ ஹரித்வாரில் உள்ள கங்கை உட்பட முக்கிய ஆறுகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. நேற்று, மழை தொடர்பான சம்பவங்களில் இரண்டு பேர் இறந்தனர், மேலும் ருத்ரபிரயாக் மாவட்டத்தில் மலைப்பகுதியில் இருந்து விழுந்த பாறைகள் மற்றும் இடிபாடுகளுக்கு அடியில் இரண்டு கடைகள் புதைந்தன.
ஞாயிற்றுக்கிழமை உதம் சிங் நகர் மாவட்டத்தில் வெள்ளம் ஏற்பட்டது.. லெவ்டா நதி மற்றும் அதிலிருந்து உருவாகும் ஓடைகளின் நீர்மட்டம் உயர்ந்து, ராம்பூர்-நைனிடால் பிரதான சாலை, சக்கர்பூர், லகான்பூர், முரியா பிஸ்டர் மற்றும் பர்ஹைனி கிராமங்களில் வசிக்கும் குடும்பங்கள் பாதிக்கப்பட்டன.
மலைப்பாங்கான மாநிலத்தில் இன்று மிக அதிக மழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) ‘சிவப்பு’ எச்சரிக்கையை விடுத்துள்ளது. வாரம் முழுவதும் கனமழை பெய்யும் என ‘மஞ்சள்’ எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கரையோரங்களில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு உத்தரகாண்ட் காவல்துறை தெரிவித்துள்ளது.. குழந்தைகள் மற்றும் விலங்குகள் ஆற்றிலிருந்து பாதுகாப்பான தூரத்தில் இருப்பதை உறுதிப்படுத்துமாறு மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது..
அமித் ஷா மதிப்பாய்வு
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, உத்தரகண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தாமியுடன் நிலைமையை ஆய்வு செய்ய பேசினார். பாதிக்கப்பட்ட பகுதிக்கு சென்று மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளில் உதவுமாறு ஐடிபிபி மற்றும் என்டிஆர்எஃப் குழுக்களை அவர் உத்தரவிட்டுள்ளார். மீட்பு நடவடிக்கைகளில் உதவ 16 பேர் கொண்ட ஐடிபிபி குழு மேக வெடிப்பு இடத்திற்கு வந்துள்ளது.
சேதத்தின் முழு அளவு இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை என்றாலும், 4 பேர் பலி, மற்றும் விருந்தினர் மாளிகைகள், ஹோட்டல்கள் மற்றும் உணவகங்கள் உள்ளிட்ட சொத்துக்களுக்கு குறிப்பிடத்தக்க சேதம் ஏற்பட்டுள்ளதாக முதல்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன..
Read More : மொத்தமாக அடித்து செல்லப்பட்ட கிராமம்..! பலர் மாயம்..! மிகப்பெரிய மேக வெடிப்பு..! பதைபதைக்க வைக்கும் வீடியோ..