41 பேர் பலி.. ஓய்வுபெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி குழு இன்று கரூர் வருகை..! மக்கள் மனு அளிக்க ஏற்பாடு..!

20015549 vijay ajai 1 2

கடந்த 27-ம் தேதி கரூரில் தவெக தலைவர் விஜய் மேற்கொண்ட பிரச்சாரத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த சம்பவம் தமிழகத்தையே உலுக்கியது.. இந்த சம்பவம் குறித்து விசாரிக்க தமிழக அரசு ஒரு நபர் ஆணையத்தை அமைத்து உத்தரவிட்டது.. இந்த ஆணையம் விசாரணை மேற்கொண்டு வந்தது.. அதே போல் சென்னை உயர்நீதிமன்றம் ஐஜி அஸ்ரா கார்க் தலைமையில் சிறப்பு விசாரணைக் குழு அமைத்து உத்தரவிட்டது. இந்தக் குழுவும் விசாரணை மேற்கொண்டு வந்தது.


இதனிடையே கரூர் சம்பவம் தொடர்பான விசாரணையை சிபிஐக்கு மாற்றி உச்சநீதிமன்றம் இடைக்கால உத்தரவிட்டது.. மேலும் ஓய்வுபெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி தலைமையில் குழு அமைத்தும் உத்தரவிட்டது..  அதன்படி இந்த வழக்கை கடந்த மாதம் 19-ம் தேதி முதல் சிபிஐ அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்..

கரூரில் முகாமிட்டுள்ள சிபிஐ அதிகாரிகள், இந்த சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர், காயமடைந்தவர்கள், காவல்துறை அதிகாரிகள், வீடியோகிராபர்கள், ஆம்புலன்ஸ் ட்ரைவர்கள், கடை உரிமையாளர்கள் என 306 பேருக்கு சிபிஐ சம்மன் அனுப்பி, அவர்களை நேரில் வரவழைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்..

தொடர்ந்து இந்த வழக்கு தொடர்பாக தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த், தேர்தல் பிரிவு பொதுச்செயலாளர் ஆதவ், அர்ஜுனா, இணை பொதுச்செயலாளர் நிர்மல் குமார் ஆகியோர் சிபிஐ அதிகாரிகள் முன்பு ஆஜராகி விளக்கம் அளித்தனர்.. இவர்களிடம் தொடர்ந்து 2 நாட்கள் விசாரணை நடைபெற்றது.. மேலும் கரூர் மாவட்ட தவெக செயலாளர் மதியழகனும், கரூர் நிர்வாகி பவுன்ராஜ் ஆகியோரிடமும் விசாரணை நடத்தப்பட்டது.

ஓய்வு பெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி தலைமையிலான குழு சிபிஐ விசாரணையை கண்காணிக்கும் என்று உச்சநீதிமன்றம் அறிவித்திருந்தது… அதன்படி இன்று இந்த குழு கரூர் சிபிஐ அலுவலகத்திற்கு வருகை தர உள்ளது.. உச்சநீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி அஜய் ரஸ்தோகி தலைமையிலான குழு வருகையை முன்னிட்டு போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.. மேலும் இந்த குழுவிடம் கரூர் சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்டவர்கள் நேரடியாக மனு அளிக்கலாம் என்று மாவட்ட நிர்வாகம் நேற்று அறிவித்திருந்தது.. அதன்படி பொதுமக்கள் மனு அளிக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது..

Read More : தொடர் உயர்வுக்கு பின் இன்று சரிந்தது தங்கம் விலை.. நகைப்பிரியர்கள் நிம்மதி..!

RUPA

Next Post

நீரிழிவு நோயாளிகளுக்கு இந்த உலர் பழங்கள் விஷத்திற்கு சமம்.. கவனமா இருங்க..!

Tue Dec 2 , 2025
These dry fruits are equivalent to poison for diabetics.
diabetes 1

You May Like