தாய்ப்பால் குடிக்கும்போது மூச்சுத்திணறல்..!! 4-வதாக பிறந்த பச்சிளம் பெண் குழந்தை மரணம்..!! சென்னையில் சோகம்..!!

Feeding 2025

சென்னை வளசரவாக்கம் கிருஷ்ணா தெருவில் வசிக்கும் பிரதீப் குமார் (வயது 35) – ராஜேஸ்வரி (30) தம்பதியினருக்கு, நான்காவது குழந்தையாகப் பிறந்த பெண் குழந்தை, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் திடீரென உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


ஏற்கனவே 3 பெண் குழந்தைகளைப் பெற்றுள்ள ராஜேஸ்வரி, 4-வது முறையாக கர்ப்பம் தரித்திருந்த நிலையில், இரண்டு நாட்களுக்கு முன் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அவருக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது. தாயும் சேயும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், ராஜேஸ்வரி குழந்தைக்குத் தாய்ப்பால் கொடுத்துக் கொண்டிருந்தார்.

அப்போது, எதிர்பாராத விதமாக குழந்தைக்கு திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டது. இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த பெற்றோர் உடனடியாக மருத்துவர்களுக்கு தகவல் தெரிவித்தனர். பின்னர், குழந்தையை பரிசோதனை செய்த மருத்துவர்கள், குழந்தை இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இந்தச் சம்பவம் குறித்து வளசரவாக்கம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தாய்ப்பால் கொடுக்கும்போது மூச்சுத்திணறல் ஏற்பட்டுத்தான் குழந்தை இறந்ததா அல்லது வேறு ஏதேனும் காரணமா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

Read More : இன்டர்நெட் இல்லாமல் கூட Google Map பயன்படுத்தலாம்..!! இது பலருக்கும் தெரியாது..!! நோட் பண்ணிக்கோங்க..!!

CHELLA

Next Post

தவறுதலாக கூட முள்ளங்கி சாப்பிட்ட பிறகு இந்த உணவுகளை சாப்பிடக்கூடாது..? விஷமாக மாறும்..!

Fri Nov 21 , 2025
Should you not eat these foods after eating radishes, even by mistake? They will become poisonous!
radish health benefits for women 1

You May Like