டெல்லியின் நிஜாமுதீன் பகுதியில் உள்ள முகலாய மன்னரான ஹுமாயூன் கல்லறை வளாகத்திற்குள் அமைந்துள்ள தர்கா ஷெரிப் பட்டே ஷாவில் கூரையின் ஒரு பகுதி இடிந்து விழுந்ததில் மூன்று பெண்கள் மற்றும் இரண்டு ஆண்கள் உட்பட ஐந்து பேர் உயிரிழந்துள்ளனர். யுனெஸ்கோவின் உலக பாரம்பரிய தளமான முகலாய மன்னரான ஹுமாயூன் கல்லறை வளாகத்திற்குள் அமைந்துள்ள தர்கா ஷெரிப் பட்டே ஷாவின் மேற்கூரை இன்று பிற்பகல் 3.50 மணியளவில் இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானது.
இந்த சமபவம் குறித்து தகவல் கிடைத்ததும் தீயணைப்ப துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர். மேலும் தேசிய பேரிடர் மீட்புப் படை (NDRF) பணியாளர்கள் இணைந்து இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்க போராடி வருகின்றனர். தற்போது வரை 11 பேர் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 7 பேர் இடிபாடுகளுக்குள் சிக்கியிருக்கலாம் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விபத்து நடந்த ஹுமாயூன் கல்லறை, டெல்லியில் உள்ள சுற்றுலாத்தலங்களில் முக்கியமான ஒன்று. இந்த சுற்றுலாத்தலத்தில் தினமும் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் நூற்றுக்கும் மேற்பட்டோர் வருவது வழக்கம்.
விபத்து நடந்த இடத்தில், இடிபாடுகளை அகற்றவும், உயிர் பிழைத்தவர்களைக் கண்டுபிடிக்கவும் முயற்சிகள் நடந்து வருகின்றன. டெல்லியில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது, பல பகுதிகளில் மழை நீர் தேங்கியிருக்கிறது. இதன் காரணமாக இந்த விபத்து நிகழ்ந்துள்ளதா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
Read More: Flash : 5 பேர் பலி.. மீட்புப் பணியின் போது MI-17 ஹெலிகாப்டர் விபத்து.. பாகிஸ்தானில் நடந்த சோகம்!