சீமான் பனை ஏறி கள்ளு குடிக்க வலியுறுத்துவதும், மாடுகளை மேய்க்கச்சொல்லுவதும் சாதி வெறியின் எச்சம் என்று விசிகவின் வன்னி அரசு கடுமையாக விமர்சித்துள்ளார். நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் நேற்றைய தினம் மதுரையில் ஆடு மாடுகளுக்கான மாநாட்டை நடத்தினார். அப்போது ஆடு மாடுகளை மேய்ப்பது அவமானம் அல்ல வெகுமானம் என்பதை உணராத வரை, நாட்டின் பொருளாதாரம் வளராது என்று ஆவசேமாக பேசினார். விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணை […]

பெரம்பலூர் மாவட்டம் தேனூர் கோவில்பாளையம் கிராமத்தில் தேர் திருவிழாவின் போது அலங்கார பகுதி சாய்ந்து விழுந்து விபத்து நிகழ்ந்துள்ளது. பெரம்பலூர் மாவட்டம் குன்னை அருகே தேனூர் கோவில்பாளையம் கிராமத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற செல்லையம்மாள் கோவில் உள்ளது. இங்கு காலம் காலமாக ஆணி மாதத்தில் திருவிழா நடைபெறுவது வழக்கம். அதன்படி கடந்த எட்டு நாட்களுக்கு முன்பு காப்பு கட்டி வெகு விமர்சையாக திருவிழா தொடங்கியது. திருவிழாவை முன்னிட்டு தினமும் அபிஷேகம் […]

திருப்புவனத்தில் நகை திருட்டு தொடர்பான புகாரில் காவல்துறையால் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட இளைஞர் அஜித்குமார் மரணம் அடைந்த நிகழ்வு, தமிழகமெங்கும் பெரும் அதிர்வை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் தொடர்பாக 5 காவலர்களும் கைது செய்யப்பட்டு, நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். தொடக்கத்தில் இந்த வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டது. பின்னர், வழக்கின் தன்மை மற்றும் பரபரப்பைக் கருத்தில் கொண்டு, இது சிபிஐக்கு மாற்றப்பட்டது. இது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்ற […]

சேலம் மேற்கு தொகுதியைச் சேர்ந்த பாமக சட்டமன்ற உறுப்பினர் அருள், கட்சி தலைமைக்கு எதிராக கருத்துக்களை தெரிவித்துள்ளதாக கூறி கட்சியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். இந்த முடிவை பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் அறிவித்துள்ளார். பாமக நிறுவனர் ராமதாஸ் தலைமையைத் தொடர்ந்து ஆதரித்து வந்த அருள், சமீபத்தில் ஒரு பேட்டியில், அன்புமணி ராமதாஸுக்கு எதிராக கடுமையான விமர்சனங்களை வெளியிட்டிருந்தார். “கட்சியில் ராமதாஸ் இருக்கும்வரை தலைவராக அவரே தொடர்வார், அதன் பிறகுதான் அன்புமணி பதவி […]

திருச்செந்தூர் முருகன் கோயில் குடமுழுக்கு விழாவுக்காக, 37 ஆண்டுகளுக்கு பிறகு மேற்கு வாசல் கதவு திறக்கப்பட உள்ளது. முருகனின் அறுபடை வீடுகளில் கடற்கரையை ஒட்டியவாறு அமைந்துள்ள திருச்செந்தூர் முருகன் கோயில், வருகிற ஜூலை 7ஆம் தேதி நடைபெறவுள்ள மகா குடமுழுக்கு விழாவுக்காக மிகுந்த விமர்சையாக தயாராகி வருகிறது. இந்த விழாவை முன்னிட்டு, கடந்த 37 ஆண்டுகளாக மூடப்பட்டிருந்த மேற்கு வாசல் கதவு இம்முறை திறக்கப்பட உள்ளது. திருச்செந்தூரில் 300 கோடி […]

கோவை அணிக்கு எதிரான ஆட்டத்தில் வெற்றி பெற்று, இந்த 9வது டி.என்.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் தொடரில் முதல் வெற்றியை பதிவு செய்துள்ளது மதுரை அணி. டி.என்.பி.எல். (TNPL) 20 ஓவர் கிரிக்கெட் தொடரின் லீக் சுற்று ஆட்டங்கள் தற்போது நடைபெற்று வருகிறது. 8வது லீக் போட்டியில் லைகா கோவை கிங்ஸ் அணியும், சீகம் மதுரை பாந்தர்ஸ் அணியும் நேற்றைய தினம் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற மதுரை […]

ஐபிஎல் 2025 இறுதி போட்டியில் 6 ரன்கள் வித்தியாசத்தில் பஞ்சாப் அணியை வீழ்த்தி கோப்பை வென்றது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு. அகமதாபாத் மைதானத்தில் நடைபெற்ற பரபரப்பான ஐபிஎல்2025 இறுதி போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி, முதலில் பந்துவீச தீர்மானித்தது. இதனையடுத்து களமிறங்கிய ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் தொடக்க வீரர்கள் விராட் கோலி மற்றும் பிலிப் சால்ட் களத்தில் அதிரடியாக தொடங்கினர். சால்ட் விரைவில் ஆட்டமிழந்தாலும், கோலி நிதானமாக […]