இந்திய சினிமாவின் ஆகச்சிறந்த நடிகரான கமல்ஹாசனின் சாதனையை, 5 வயது சிறுமி ஒருவர் முறியடித்துள்ளார் என்பது உங்களுக்குத் தெரியுமா? , கமல்ஹாசனே அந்தச் சிறுமியைப் பாராட்டியும் உள்ளார். யார் அந்தச் சிறுமி? விரிவாக பார்க்கலாம்..
கடந்த ஆண்டு, 71-வது தேசிய திரைப்பட விருதுகள் வழங்கும் விழா நடைபெற்றது. அந்த விழாவில், பாலிவுட்டின் ‘பாட்ஷா’ ஷாருக்கான், ‘ஜவான்’ திரைப்படத்திற்காக தேசிய விருதை வென்றார். நடிகை ராணி முகர்ஜிக்கு சிறந்த நடிகைக்கான விருது வழங்கப்பட்டது.
மேலும், ராம் குமார் பாலகிருஷ்ணன் இயக்கிய ‘பார்க்கிங்’ (Parking) திரைப்படம், சிறந்த திரைக்கதைக்கான விருதை வென்றது. சிறந்த திரைக்கதை எழுத்தாளருக்கான விருது ராம் குமார் பாலகிருஷ்ணனுக்கு வழங்கப்பட்டது. சிறந்த துணை நடிகருக்கான விருது எம்.எஸ். பாஸ்கருக்கு வழங்கப்பட்டது. இவ்விழாவில், இந்தியத் திரைப்படத்துறையின் மிக உயர்ந்த விருதான ‘தாதாசாகேப் பால்கே’ விருது, மலையாள நடிகர் மோகன்லாலுக்கு வழங்கப்பட்டது.
இந்நிலையில், இந்த தேசிய விருது வழங்கும் விழாவில் பலரின் கவனத்தையும் ஈர்த்தவர், 5 வயதுச் சிறுமி நட்சத்திரமான திரிஷா தோசர் ஆவார். மேடையில் சேலை அணிந்தபடி, குடியரசுத் தலைவரிடமிருந்து தேசிய விருதைப் பெறும் திரிஷா தோசரின் காணொளி ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலானது.
யார் இந்த திரிஷா தோசர்?
மராத்தி மொழியில் வெளியான ‘நால் 2’ (Naal 2) திரைப்படத்தில் நடித்ததற்காக, சிறந்த குழந்தை நட்சத்திரத்திற்கான தேசிய விருதை இவர் வென்றார். குழந்தைகளை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்ட இந்தப் படத்தில், ‘சிமி’ எனும் கதாபாத்திரத்தில் திரிஷா தோசர் மிகச் சிறப்பாக நடித்திருந்தார். இந்தப் படத்தில் நடித்தபோது திரிஷா தோசருக்கு வெறும் 3 வயது மட்டுமே ஆகியிருந்தது.
தேசிய விருது பெற்ற மிக இளம் வயதுக் கலைஞராக திரிஷா தோசர் உருவெடுத்துள்ளார். தேசிய விருதைப் பெற்றபோது அவருக்கு வயது வெறும் 5 மட்டுமே. இதன் மூலம், நடிகர் கமல்ஹாசனின் சாதனையை திரிஷா தோசர் முறியடித்துள்ளார்.
இது தொடர்பாக, கமல்ஹாசன் தனது ‘X’ (முன்னர் ட்விட்டர்) பக்கத்தில் அந்தச் சிறுமியைப் பாராட்டி ஒரு பதிவை வெளியிட்டிருந்தார். அதில் அவர் உணர்ச்சிப்பூர்வமாக, “என் வணக்கங்கள். நான் எனது முதல் தேசிய விருதைப் பெற்றபோது எனக்கு வயது 6. நீங்களோ எனது சாதனையை முறியடித்துவிட்டீர்கள். நீங்கள் கடக்க வேண்டிய தூரம் இன்னும் வெகு தொலைவில் உள்ளது, அம்மா. தொடர்ந்து உழைத்துக்கொண்டே இருங்கள். உங்கள் குடும்பத்தினருக்கு என் வாழ்த்துகள்,” என்று குறிப்பிட்டிருந்தார்.
Read More : ஏற்ற இறக்கத்தில் விலை..! இப்போது தங்கம், வெள்ளி வாங்கலாமா..? வேண்டாமா..? நிபுணர்களின் அட்வைஸ் இதுதான்..!



