திருவாரூர் மாவட்டத்தில் டிடிவி தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தில் இருந்து விலகிய முக்கிய நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் மீண்டும் அதிமுகவில் இணைந்து கொண்டனர்.
மன்னார்குடியில் உள்ள அதிமுக. அலுவலகத்தில் இதற்கான இணைப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், அமமுகவின் திருவாரூர் ஒன்றியச் செயலாளர் குறும்பேரி ஆர். மணிகண்டன் தலைமையில், ஒன்றிய அவைத் தலைவர் ராஜமாணிக்கம், ஒன்றிய மகளிர் அணி துணைச் செயலாளர் சாந்தி உட்பட சுமார் 500-க்கும் மேற்பட்டோர் அமமுகவில் இருந்து விலகி அதிமுகவில் இணைந்து கொண்டனர்.
இவர்களை, அதிமுகவின் மாவட்டச் செயலாளரும், முன்னாள் அமைச்சரும், மன்னார்குடி சட்டமன்ற உறுப்பினருமான ஆர். காமராஜ், நேரடியாக சந்தித்து, சால்வை அணிவித்து, கட்சியின் புதிய உறுப்பினர்களாக சேர்த்துக் கொண்டார்.
Read More : சனிப்பெயர்ச்சி..!! இந்த 3 ராசிக்காரர்களுக்கும் இனி பிரச்சனை வந்து கொண்டே இருக்கும்..!!



