பொதுத்துறை வங்கிகளில் ஒன்றான பாங்க் ஆஃப் இந்தியா (BOI), நாடு முழுவதும் உள்ள தனது கிளைகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி, 514 கடன் அதிகாரிகள் (Credit Officers) பணியிடங்களுக்குத் தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
கல்வித் தகுதி மற்றும் ஊதியம் :
இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் ஏதேனும் ஒரு துறையில் இளங்கலைப் பட்டம் (Any Degree) பெற்றிருக்க வேண்டும். தேர்வு செய்யப்படும் அதிகாரிகளுக்கு மாதம் ரூ. 64,820 முதல் ரூ. 1,20,940 வரை ஊதியம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்தியா முழுவதும் உள்ள பாங்க் ஆப் இந்தியா கிளைகளில் இந்தப் பணியிடங்கள் ஒதுக்கப்படும் என்பதால், தேர்ந்தெடுக்கப்படுபவர்கள் நாட்டின் எந்தப் பகுதியிலும் பணியாற்றத் தயாராக இருக்க வேண்டும்.
வயது வரம்பு மற்றும் தளர்வுகள் :
விண்ணப்பதாரர்கள் குறைந்தபட்சம் 25 வயது பூர்த்தியடைந்தவராகவும், 40 வயதுக்கு மேற்படாதவராகவும் இருக்க வேண்டும். அரசு விதிகளின்படி, எஸ்சி/எஸ்டி பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், ஓபிசி பிரிவினருக்கு 3 ஆண்டுகளும், மாற்றுத்திறனாளிகளுக்கு (பிரிவுகளைப் பொறுத்து) 10 முதல் 15 ஆண்டுகள் வரையிலும் வயது வரம்பில் தளர்வுகள் வழங்கப்பட்டுள்ளன.
தேர்வு செய்யும் முறை மற்றும் விண்ணப்பக் கட்டணம் :
விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் தேர்வு (Online Test) மற்றும் அதனைத் தொடர்ந்து நடைபெறும் நேர்காணல் (Personal Interview) ஆகியவற்றின் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். இதற்கான விண்ணப்பக் கட்டணமாக பொதுப் பிரிவினருக்கு ரூ. 850-ம், எஸ்சி/எஸ்டி மற்றும் மாற்றுத்திறனாளி விண்ணப்பதாரர்களுக்கு ரூ. 175-ம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்கும் முறை :
தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் வங்கியின் அதிகாரப்பூர்வ இணையதளமான https://bankofindia.co.in/ மூலம் ஆன்லைனில் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் வரும் டிசம்பர் 20, 2025 முதல் தொடங்குகிறது. ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி ஜனவரி 05, 2026 ஆகும். கடைசி நேர பதற்றத்தை தவிர்க்க, விருப்பமுள்ளவர்கள் முன்கூட்டியே விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
Read More : மாதம் ரூ.1,25,000 சம்பளம்..!! கொட்டிக் கிடக்கும் ஆசிரியர் காலியிடங்கள்..!! உடனே அப்ளை பண்ணுங்க..!!



