தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே 15 வயது சிறுமி, அரசு மேல்நிலைப் பள்ளியில் 10ஆம் வகுப்பு படித்து வருகிறார். இவரிடம் அதே பகுதியைச் சேர்ந்த பிச்சைமணி (வயது 52) என்பவர் ஆசைவார்த்தைகளை கூறி, பலமுறை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். அப்போது, இருவரும் தனிமையில் இருப்பதை அதே பகுதியை சேர்ந்த 16 வயது சிறுவன், தன்னுடைய செல்போனில் வீடியோ எடுத்து வைத்துள்ளான்.
இதையடுத்து, அந்த வீடியோவை சிறுமியிடம் காட்டி, தன்னுடனும் உடலுறவு வைத்துக் கொள்ள வேண்டும் என்றும் இல்லையென்றால் வீடியோவை சமூக வலைதளங்களில் பதிவிட்டு விடுவதாகவும் கூறி மிரட்டியுள்ளார். இதனால், பயந்து போன சிறுமி சம்மதம் தெரிவித்துள்ளார். இதையடுத்து, அந்த சிறுவனும் சிறுமியை பலமுறை பலாத்காரம் செய்துள்ளான்.
இந்நிலையில், சில மாதங்களாகவே சிறுமியின் உடல்நிலை மோசமடைந்த நிலையில் அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு பரிசோதித்த மருத்துவர், சிறுமி கர்ப்பமாக இருப்பதாக தெரிவித்தனர். இதைக்கேட்டு ஆடிப்போன தாய், சிறுமியிடம் இதுகுறித்து விசாரித்த போது நடந்த அனைத்தையும் கூறியுள்ளார்.
இதையடுத்து, ஆத்திரமடைந்த சிறுமியின் தாய், அவரை அழைத்துக் கொண்டு காவல்நிலையம் சென்று புகார் அளித்துள்ளர. அந்த புகாரின் அடிப்படையில், காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து சிறுமியை ஏமாற்றி வன்கொடுமை செய்த பிச்சைமணி மற்றும் சிறுவனை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர். அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.



