இன்று காலை வங்கதேசத்தில் 5.7 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதில் குறைந்தது 6 பேர் உயிரிழந்தனர்.. மேலும் பலர் காயமடைந்தனர் என்று உள்ளூர் ஊடகங்கள் தெரிவிக்கின்றன. மேற்கு வங்கம் மற்றும் பிற வடகிழக்கு மாநிலங்களில் நிலநடுக்கம் பரவலாக உணரப்பட்டது, இதனால் மக்கள் வீடுகளை விட்டு வெளியே ஓடினர்.
இந்த நிலநடுக்கம் (உள்ளூர் நேரப்படி) காலை 10.38 மணியளவில் ஏற்பட்டது.. இந்த நிலநடுக்கத்தின் மையம் தலைநகர் டாக்காவில் இருந்து சுமார் 25 கி.மீ தொலைவில் உள்ள நர்சிங்டி மாவட்டத்தின் கோரஷால் பகுதியில் அமைந்துள்ளது. 10 கி.மீ ஆழத்தில் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் (USGS) தெரிவித்துள்ளது.
இந்த நிலநடுக்கம் காரணமாக ஒரு கட்டிடத்தின் கூரை மற்றும் சுவரின் சில பகுதிகள் இடிந்து விழுந்ததில் மூன்று பேர் கொல்லப்பட்டனர், மேலும் மூன்று பாதசாரிகள் தண்டவாளங்கள் விழுந்து நசுங்கினர். இதனால் மொத்தம் 6 வரை உயிரிழந்தனர்
டாக்கா முழுவதும் பீதியால் ஏற்பட்ட சம்பவங்களில் பலர் காயமடைந்தனர், டாக்காவில் நிலநடுக்கத்தின் போது கட்டிடங்கள் கடுமையாக அசைந்தன. பின்விளைவுகள் ஏற்படும் என்ற அச்சம் இருந்ததால், மகள் வீடுகள், அலுவலகங்கள் மற்றும் உயரமான கட்டிடங்களில் இருந்து வெளியேறி திறந்தவெளிகளில் கூடினர்.
இந்தியா மற்றும் யூரேசியா டெக்டோனிக் தகடுகளின் மோதலால் வடக்கு மற்றும் தென்கிழக்கு வங்காளதேசம் பூகம்ப பாதிப்புக்குள்ளான மண்டலங்களாக அறியப்பட்டாலும், வெள்ளிக்கிழமை நிலநடுக்கம் ஏற்பட்ட மத்தியப் பகுதி – பொதுவாக குறைவான செயலில் இருப்பதாக USGS தெரிவித்துள்ளது.
கொல்கத்தாவில் பலத்த நிலநடுக்கம் ஏற்பட்டது
கொல்கத்தா, மேற்கு வங்கத்தின் சில பகுதிகள் மற்றும் அசாமின் குவஹாத்தி முழுவதும் நிலநடுக்கம் உணரப்பட்டது, இதனால் மக்கள் முன்னெச்சரிக்கையாக தெருக்களுக்கு ஓடத் தூண்டினர். கொல்கத்தாவில் வசிக்கும் பலர் சமூக ஊடகங்களில் தீவிரத்தை விவரித்தனர். “சிறிய நிலநடுக்கம் ஆனால் பெரிய பீதி,” என்று சுப்ரதிம் மைத்ரா எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.. சிறிய அதிர்வு கூட சுற்றுப்புறங்களில் எச்சரிக்கையை ஏற்படுத்தியது என்று கூறினார். இதே போல் பலரும் மேற்கு வங்கத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் வீடியோக்களை பதிவிட்டு வருகின்றனர்..



