645 காலியிடங்கள்.. குரூப் 2, 2ஏ தேர்வு.. TNPSC வெளியிட்ட அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. முழு விவரம் இதோ..

tnpsc exam 2025

645 காலிப்பணியிடங்களை நிரப்ப குரூப் 2, 2ஏ பணிகளுக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ளது.

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணயமான டிஎன்பிஎஸ்சி இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிவிப்பில் “ சார்பதிவாளர்‌, இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர்‌, வனவர்‌, முதுநிலை வருவாய்‌ ஆய்வாளர்‌, மற்றும்‌ உதவியாளர்‌ உள்ளிட்ட பல்வேறு பதவிகளுக்கான 645 காலிப்பணியிடங்களை நிரப்ப ஒருங்கிணைந்த குரூப் 2, 2ஏ பணிகளுக்கான அறிவிப்பு இன்று (15.07.2025) வெளியிடப்பட்டுள்ளது.


தேர்வர்கள்‌ 15.07.2025 முதல்‌ 13.08.2025 வரை தேர்வாணைய இணையதளத்தின்‌ மூலம்‌ விண்ணப்பிக்கலாம்‌. முதல்நிலைத்‌ தேர்வு 28.09.2025 அன்று நடைபெறும்‌. தேர்வர்கள்‌ தேர்வுக்கட்டணத்தை 1011 மூலமாகவும்‌ செலுத்தலாம்‌. தொடர்ச்சியாக 13-வது முறையாக தேர்வாணையத்தின்‌ ஆண்டுத்திட்டத்தில்‌ குறிப்பிட்ட தேதியில்‌ தேர்விற்கான அறிவிப்பு தேர்வாணையத்தால்‌ தவறாமல்‌ வெளியிடப்பட்டுள்ளது.

தேர்வர்களின்‌ நலன்‌ கருதி குரூப் 2, 2ஏ தேர்வின் தேர்வுத்திட்டம்‌ மாற்றியமைக்கப்பட்டுள்ளது. 2018 முதல்‌ 2025 வரையுள்ள 8 ஆண்டுகளில்‌, முதன்முறையாக தொடர்ச்சியாக அடுத்தடுத்த ஆண்டுகளில்‌ ஒருங்கிணைந்த குரூப் 2, 2ஏ அறிவிப்பு தேர்வாணையத்தால்‌ வெளியிடப்பட்டுள்ளது.

2025-ம்‌ ஆண்டு குரூப் 2, குரூப் 2 ஏ தேர்வு மூலம் ஒரு நிதியாண்டிற்கு 645 காலிப்பணியிடங்களை நிரப்ப திட்டமிடப்பட்டுள்ளது. மேலும்‌ அரசுத்துறை 7 நிறுவனங்களிடமிருந்து அதிகரித்து பெறப்படும்‌ பட்சத்தில்‌ கலந்தாய்விற்கு முன்பாக காலிப்பணியிடங்கள் மேலும்‌ அதிகரிக்கப்படும்‌..” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read More : #Breaking : இனி அரசு திட்டங்கள் வீடு தேடி வரும்.. ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டத்தை தொடங்கி வைத்தார் முதலமைச்சர்..

RUPA

Next Post

Flash: TNPSC குரூப் 2, குரூப் 2ஏ தேர்வு தேதி அறிவிப்பு..!

Tue Jul 15 , 2025
The Tamil Nadu Public Service Commission has announced the examination date for Group 2 and Group 2A posts.
TNPSC 2025 2

You May Like