கேரள மாநிலம் கொல்லம் மாவட்டத்தை சேர்ந்தவர் 65 வயது மூதாட்டி. இவர், கோயிலுக்கு சென்றிருந்த நிலையில், மீண்டும் வீடு திரும்பிக் கொண்டிருந்தார். இதனை நோட்டமிட்ட மர்ம நபர் ஒருவர், அந்த மூதாட்டியை பின் தொடர்ந்து சென்றுள்ளார். இதை மூதாட்டியும் கவனிக்கவில்லை.
பின்னர், அந்த மூதாட்டி ஆள்நடமாட்டம் இல்லாத பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தபோது, திடீரென பின் தொடர்ந்து வந்த அந்த நபர், மூதாட்டியை அங்கிருந்த புதருக்குள் இழுத்துச் சென்றுள்ளார். பின்னர், அங்கு வைத்து அவரை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதனால் ஏற்பட்ட வலியால் மூதாட்டி அலறி துடித்துள்ளார். மேலும், இந்த விஷயத்தை வெளியில் சொன்னால், கொலை செய்து விடுவதாகவும் மூதாட்டியை அந்த நபர் மிரட்டிவிட்டு தப்பிச்சென்றுள்ளார்.
அப்போது, அவ்வழியாக சென்ற சிலர் புதருக்குள் மூதாட்டியின் சத்தம் கேட்டதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர்கள், உடனே அவரை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் கண்ணநல்லூர் போலீசுக்கு தகவல் கொடுத்தனர். அவர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். அப்போது, சம்பவ இடத்தில் இருந்து சுமார் 2 கிலோமீட்டர் தொலைவில் புதருக்குள் பதுங்கியிருந்த ஒருவரை பிடித்து விசாரித்தனர்.
விசாரணையில், அவர் மீயன்னூர் பகுதியை சேர்ந்த அனூஜ் (27) என்பதும், மூதாட்டியை பலாத்காரம் செய்தது அவர்தான் என்பதும் உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அனூஜ் கைது செய்யப்பட்டு, அவரிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Read More : பீங்கான் பாத்திரங்களை சமையலுக்கு பயன்படுத்துறீங்களா..? இல்லத்தரசிகளே கட்டாயம் இதை தெரிஞ்சிக்கோங்க..!!