தாம்பத்திய உறவு என்பது ஆண் – பெண் இருவருக்கும் பொதுவான ஒரு இயற்கையான வேட்கை. தம்பதியருக்குள் அன்பு மலர்வதற்கும், அதே சமயம் தவறான புரிதல் காரணமாக பிணக்குகள் முற்றுவதற்கும், இந்த உறவில் ஏற்படும் சிக்கல்களுக்கு முக்கிய இடமுண்டு. இல்லற வாழ்க்கை முழுமை பெறவும், கணவன்-மனைவிக்குள் இறுதி வரை புரிதலும் இன்பமும் நிலைக்கவும், நல்ல உடல்நலம் மற்றும் மனநலம் மிகவும் அவசியம். இதனுடன், சில ஆரோக்கியமான உணவுகளைச் சேர்ப்பது தாம்பத்திய வாழ்வின் இன்பத்தைப் பன்மடங்கு அதிகரிக்க உதவும் என்று நம் முன்னோர்கள் காலம்காலமாக நம்பி வந்துள்ளனர்.
அந்தக் காலத்தில், புதிதாக திருமணம் ஆன இளைஞர்களைப் பார்த்து மூத்தவர்கள், “வாரத்துக்கு மூன்று நாட்களாவது நாட்டுக்கோழிக் குழம்பு சாப்பிடுப்பா!” என்று பரிந்துரைப்பார்கள். அசைவம் சாப்பிடாதவர்களுக்கு, சிறிது பச்சை வெங்காயத்துடன் ஒரு கைப்பிடி வேர்க்கடலையை சாப்பிடச் சொல்வார்கள். இவையெல்லாம் உடலுக்கு தேவையான ஆற்றலையும் கிளர்ச்சியையும் அளிக்கும் என்பதை அவர்கள் அனுபவத்தில் அறிந்து வைத்திருந்தார்கள். இன்று அறிவியலும் அதை உறுதி செய்கிறது. அந்த உணவுகளின் பட்டியல் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது.
சிட்ரஸ் பழங்கள் : எலுமிச்சை, ஆரஞ்சு, சாத்துக்குடி போன்ற சிட்ரஸ் பழங்கள் வைட்டமின் சி, ஃபோலிக் ஆசிட் மற்றும் ஆன்டிஆக்ஸிடென்ட்கள் நிறைந்து காணப்படுகின்றன. இவை உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதுடன், பாலுணர்வுகளை கிளர்ந்தெழச் செய்வதிலும் சிறந்து விளங்குகின்றன.
காய்ந்த மிளகாய் : நாம் சமையலுக்குப் பயன்படுத்தும் காய்ந்த மிளகாயில், கேப்சாய்சின் (Capsaicin) என்ற வேதியல் கூட்டுப் பொருள் உள்ளது. இது மூளையில் ‘எண்டார்ஃபின்களை’ (Endorphins) வெளியேற்றத் தூண்டுகிறது. இந்த எண்டார்ஃபின்கள் தாம்பத்திய உறவுக்குத் தேவையான ஆற்றலையும் உற்சாகத்தையும் அளிக்கின்றன.
பாதாம் பருப்பு : ஒரு காலத்தில் ‘வாதாம் கொட்டை’ என்று அழைக்கப்பட்ட பாதாம், உடலுக்கு ஊட்டச்சத்து மற்றும் கிளர்ச்சியை தரக்கூடியது. இதில் உள்ள துத்தநாகச் சத்து, செலினியம் மற்றும் வைட்டமின் இ ஆகியவை ஆரோக்கியத்திற்கு நல்லது. முக்கியமாக, துத்தநாகம் தாம்பத்திய உறவுக்கான விருப்பத்தையும் உணர்வையும் தூண்டக்கூடியது. இரவில் நான்கைந்து பாதாம் பருப்புகளைச் சாப்பிடுவது நன்மை பயக்கும்.
சாக்லேட் : காதல் மற்றும் தாம்பத்திய உறவோடு நீண்ட காலமாக தொடர்பில் இருக்கும் இந்த இனிமையான பொருளில், ட்ரிப்டோபேன் (Tryptophan) என்ற அமினோ அமிலம் உள்ளது. இது உடலில் செரடோனின் சுரக்க உதவுகிறது. இதன் விளைவாக, பாலியல் உணர்வுகள் தூண்டப்படுகின்றன.
இஞ்சி : சமையலறையில் மட்டுமே இஞ்சியின் பங்கு இருப்பதாக நினைக்க வேண்டாம். இஞ்சி ரத்த நாளங்களை ஆரோக்கியப்படுத்தி, உடலின் ரத்த ஓட்டத்தை சீராக்கும் திறன் கொண்டது. ரத்த ஓட்டம் சீராக இருந்தால், தாம்பத்திய உறவு மேம்படும் ஆற்றல் கிடைக்கிறது. ஒரு வாரத்திற்கு இரண்டு முதல் மூன்று டீஸ்பூன் இஞ்சியை சேர்த்துக் கொள்வது இதய ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது என்று ஆய்வுகள் கூறுகின்றன.
அவகேடோ : இன்று சிறிய நகரங்களில் கூட எளிதாக கிடைக்கக் கூடிய அவகேடோ பழத்தில், வைட்டமின் பி6, தாதுக்கள் மற்றும் இதயத்திற்கு நலம் பயக்கும் ஒற்றை நிறைவுறாக் கொழுப்புகள் (Monounsaturated Fat) உள்ளன. இவை உடலுக்குச் சக்தி அளிப்பதுடன், அதில் உள்ள ஒமேகா-3 கொழுப்பு அமிலம் நல்ல உணர்வுகளை இயல்பாகவே தூண்டுகிறது.
இல்லற வாழ்க்கை சிறக்கவும், அன்பு நிலைக்கவும், தம்பதியர் ஆரோக்கியமான உணவுகளை தங்கள் அன்றாடப் பட்டியலில் சேர்த்துக் கொள்வதுடன், வாழ்க்கை துணையிடம் அன்பும் புரிதலும் குறையாமல் பார்த்துக் கொள்வதும் மிகவும் அவசியம்.
Read More : இன்டர்நெட் இல்லாமல் கூட Google Map பயன்படுத்தலாம்..!! இது பலருக்கும் தெரியாது..!! நோட் பண்ணிக்கோங்க..!!



