உங்கள் வீட்டில் தொடர்ச்சியான பிரச்சனைகள், நிதி நெருக்கடி அல்லது குடும்ப உறுப்பினர்களுக்கு உடல்நல கோளாறுகள் ஏற்படுகிறதா? நீங்கள் எவ்வளவு முயன்றாலும் வாழ்க்கைத் தரம் உயரவில்லையா? வாஸ்து நிபுணர்களின் கூற்றுப்படி, இதுபோன்ற பிரச்சனைகள் அனைத்தும் உங்கள் வீட்டில் இருக்கும் வாஸ்து குறைபாடுகளால் ஏற்பட்டிருக்கலாம். இந்தக் குறைபாடுகளை நீக்கி, வீட்டில் நேர்மறை ஆற்றலை ஈர்ப்பதற்கும், செல்வம், செழிப்பு, மற்றும் மகிழ்ச்சியை நிலைநாட்டுவதற்கும் உங்கள் வீட்டில் வைத்திருக்க வேண்டிய 7 முக்கியமான வாஸ்து பொருட்களைப் பற்றித் தெரிந்துகொள்வோம்.
வீட்டில் வைக்க வேண்டிய 7 பொருட்கள் :
குபேரர் சிலை: குபேரர் செல்வத்தின் அடையாளமாக கருதப்படுகிறார். வீட்டின் வடகிழக்கு திசையில் குபேரரின் சிலையை வைப்பதன் மூலம், அந்த வீட்டிற்கு நிதி வளம் பெருகும் என்பது நம்பிக்கை.
லட்சுமி தேவி: செல்வத்தை அளிக்கும் லட்சுமி தேவியின் அருள் இருந்தால் நிதிப் பிரச்சனைகள் இருக்காது. குடும்பத்தின் அனைத்து நிதி சிக்கல்களும் நீங்க, வீட்டின் பூஜை அறையில் லட்சுமி தேவியின் சிலையை வைத்து, தினமும் விளக்கேற்றி வழிபடுவது நன்மை பயக்கும்.
மீன் தொட்டி: மீன்கள் செழிப்பின் சின்னங்கள். வீட்டில் ஒரு மீன் தொட்டி வைத்து, அதில் ஒரு ஜோடி மீன்களை வளர்ப்பது மகிழ்ச்சி, அமைதி மற்றும் செல்வத்தை ஈர்க்கும்.
சங்கு: சங்கு மிகவும் புனிதமான பொருளாகும். இதை வீட்டில் வைத்திருப்பது எதிர்மறை சக்திகளை விலக்கி, நேர்மறை சக்திகளை உள்ளே வரவழைக்கும். இதனால் வாஸ்து குறைபாடுகள் நீங்கி, இனிமையான சூழல் உருவாகும்.
யானை சிலை: யானை, வலிமை மற்றும் நிலைத்தன்மையைக் குறிக்கிறது. வீட்டின் பிரதான நுழைவாயிலில் யானை சிலையை வைப்பது, நேர்மறை ஆற்றலை வீட்டிற்குள் கொண்டு வரும்.
படிகங்கள்: படிகங்கள் நேர்மறை ஆற்றலின் சின்னங்கள். இவற்றை வீட்டில் வைத்தால், எதிர்மறை சக்தி விரட்டப்படும். எனினும், உங்கள் ஜாதகத்திற்குப் பொருத்தமான படிகத்தைத் தேர்ந்தெடுத்து வைப்பது அவசியம்.
மங்களகரமான தாவரங்கள்: துளசி, மணி பிளாண்ட் போன்ற தாவரங்களை வீட்டில் வளர்ப்பது நேர்மறை ஆற்றலின் ஓட்டத்தை அதிகரிக்கும். இது வாஸ்து குறைபாடுகளையும் நீக்கும். முட்கள் உள்ள செடிகளை வளர்ப்பதைத் தவிர்க்க வேண்டும்.
Read More : இரவில் தூங்கும்போது ஸ்வெட்டர் அணியலாமா? வேண்டாமா?. அதன் நன்மைகள் மற்றும் தீமைகள் இதோ!.



