இந்தியாவில் சிறந்த திரைப்படங்கள், சிறந்த நடிகர்கள், நடிகைகளுக்கு 1954-ம் ஆண்டு முதல் தேசிய விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது.. சிறந்த இயக்குனர், சிறந்த ஓலிப்பதிவு, சிறந்த ஒலி வடிவமைப்பு, சிறந்த நடிகர், சிறந்த இசை போன்ற பல துறைகளுக்கு தேசிய விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது.
அந்த வகையில் 2023-ம் ஆண்டிற்கான தேசிய திரைப்பட விருதுகள் வழங்கும் விழா இன்று டெல்லியில் நடைபெற்றது.. தேசிய விருதுக்கு தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு குடியரசு தலைவர் திரௌபதி முர்மு விருதுகளை வழங்கி வருகிறார்..
இந்த விழாவில் நடிகர் ஷாருக்கானுக்கு சிறந்த நடிகருக்கான தேசிய விருதை குடியரசு தலைவர் திரௌபதி முர்மு வழங்கினார்.. 2023 இல் வெளியான ஜவான் படத்திற்காக ஷாருக்கான் தனது முதல் தேசிய விருதை வென்றார், 12வது ஃபெயில் படத்தில் நடித்த விக்ராந்த் மாஸியுடன் சிறந்த நடிகருக்கான விருதைப் பகிர்ந்து கொண்டார். தனது 30 ஆண்டுகால திரை வாழ்க்கையில் ஷாருக்கான் 100-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருந்தாலும் அவர் தேசிய விருது வாங்குவது இதுவே முதன்முறையாகும்..
சிறந்த நடிகைக்கான விருது திருமதி சாட்டர்ஜி vs நோர்வே படத்திற்காக ராணி முகர்ஜிக்கு வழங்கப்பட்டது. மோனலாலுக்கு தாதாசாகேப் பால்கே விருது வழங்கப்படும்.
ஷாருக்கான் அடுத்ததாக தீபிகா படுகோன் மற்றும் ராணி முகர்ஜியுடன் கிங் படத்தில் நடிக்கிறார். அவரின் மகள் சுஹானா கானும் அதில் நடிக்கிறார். இந்த படத்தை சித்தார்த் ஆனந்த் இயக்க உள்ளார்.



