2023 ஆம் ஆண்டிற்கான 71வது தேசிய திரைப்பட விருதுகள் இன்று மாலை அறிவிக்கப்பட்டன. நாடு முழுவதும் இருந்து திரைப்படங்கள், நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் சினிமாவில் அளித்த பங்களிப்புக்காக கௌரவிக்கப்பட்டனர். ஷாருக்கான், ராணி முகர்ஜி மற்றும் விக்ராந்த் மாஸ்ஸி சிறந்த நடிகருக்கான விருதுகளை வென்றனர்.. தமிழ் படமான பார்க்கிங் 3 தேசிய விருதுகளை வென்றுள்ளது.. ஹனுமான், உள்ளொழுக்கு போன்ற பிராந்திய படங்களும் விருதுகளை வென்றுள்ளன..
திரைப்படங்கள்:
ஸ்பெஷல் மென்ஷன் : எம்.ஆர்.ராஜகிருஷ்ணன் (அனிமல்- ரீ- ரெக்கார்டிங்)
சிறந்த தை பாக்கே (அசாமி) மொழி திரைப்படம்: Pai Tang…Step of Hope
சிறந்த கரோ மொழி திரைப்படம் (மேகாலயா) : ரிம்டோட்டியங்கா
சிறந்த தெலுங்கு படம்: பகவந்த் கேசரி
சிறந்த தமிழ் படம்: பார்க்கிங்
சிறந்த பஞ்சாபி திரைப்படம்: Godday Godday Chaa
சிறந்த ஒடியா படம்: புஷ்கரா
சிறந்த மராத்தி படம்: ஷ்யாம்ச்சி ஆய்
சிறந்த மலையாளத் திரைப்படம்: உள்ளொழுக்கு
சிறந்த கன்னட படம்: காண்டீலு
சிறந்த இந்தி படம்: கதல்
சிறந்த குஜராத்தி திரைப்படம்: வாஷ்
சிறந்த பெங்காலி படம்: டீப் ஃப்ரிட்ஜ்
சிறந்த அசாமிய திரைப்படம்: ரொங்காடபு 1982
சிறந்த ஆக்ஷன்: நந்து-ப்ருத்வி (ஹனுமான்)
சிறந்த நடன அமைப்பு: வைபவி வணிகர் (Dindhora Baje Re – Rocky Aur Rani Kii Prem Kahaani)
சிறந்த பாடல் வரிகள்: காசர்லா ஷ்யாம் (ஊரு பல்லேடுறு – பாலகம்)
சிறந்த இசை இயக்கம்: ஜி.வி.பிரகாஷ் குமார் (வாத்தி), ஹர்ஷவர்தன் ராமேஷ்வர் (அனிமல்)
சிறந்த ஒப்பனை: ஸ்ரீகாந்த் தேசாய் (சாம் பகதூர்)
சிறந்த ஆடை வடிவமைப்பு: சச்சின், திவ்யா, நிதி (சாம் பகதூர்)
சிறந்த தயாரிப்பு வடிவமைப்பு: மோகன்தாஸ் (2018)
சிறந்த எடிட்டிங்: மிதுன் முரளி (பூக்காளம்)
சிறந்த ஒலி வடிவமைப்பு: சச்சின் சுதாகரன், ஹரிஹரன் (அனிமல்)
சிறந்த திரைக்கதை: சாய் ராஜேஷ் (பேபி), ராம்குமார் பாலகிருஷ்ணன் (பார்க்கிங்)
சிறந்த வசனம் : தீபக் கிங்ரானி (Sirf Ek Bandha Kaafi Hai)
சிறந்த ஒளிப்பதிவு: பிரசாந்தனு மொகபத்ரா (தி கேரளா ஸ்டோரி)
சிறந்த பின்னணி பாடகர்: ஷில்பா ராவ் (சாலியா – ஜவான்), ரோஹித் (பிரேமிஸ்துன்னா – பேபி)
சிறந்த குழந்தை கலைஞர்: சுக்ரிதி பாண்டிரெட்டி (காந்தி தாத்தா செட்டு), கபீர் கந்தாரே (ஜிப்சி), த்ரீஷா தோஷர், ஸ்ரீனிவாஸ் போகலே, பார்கவ் (நாள் 2)
துணை வேடத்தில் சிறந்த நடிகர்: ஊர்வசி (உள்ளொழுக்கு), ஜான்கி போடிவாலா (வாஷ்), விஜயராகவன் (பூக்களம்), எம்.எஸ். பாஸ்கர் (பார்க்கிங்)
சிறந்த முன்னணி நடிகர்: ராணி முகர்ஜி (Mrs Chatterjee vs Norway), ஷாருக்கான் (ஜவான்), விக்ராந்த் மாஸ்ஸி (12th Fail)
சிறந்த இயக்கம்: சுதிப்தோ சென் ( தி கேரளா ஸ்ட்ரோரி)
AVGC (Animation, Visual Effects, Gaming, and Comics) சிறந்த படம்: ஹனுமான்
சிறந்த குழந்தைகள் படம்: நாள் 2
தேசிய, சமூக விழுமியங்களை ஊக்குவிக்கும் சிறந்த படம்: சாம் பகதூர்
சிறந்த பிரபலமான திரைப்படம், முழுமையான பொழுதுபோக்கு: Rocky Aur Rani Kii Prem Kahaani
சிறந்த அறிமுக படம்: Aatmapamphlet
சிறந்த படம்: 12th Fail
குறும்படங்கள், ஆவணப்படங்கள் :
ஸ்பெஷல் மென்ஷன் : Nekal – Chronicle of the Paddy Man, The Sea and the Seven Villages
சிறந்த ஸ்கிரிப்ட்: Sunflowers Were The First Ones To Know
சிறந்த குரல்வழி: ஹரி கிருஷ்ணன் எஸ் (The Sacred Jack – Exploring The Tree of Wishes)
சிறந்த இசை இயக்கம்: பிரனில் தேசாய் (The First Film)
சிறந்த எடிட்டிங்: நிலாத்ரி ராய் (Moving Focus)
சிறந்த ஒலி வடிவமைப்பு: ஷுபருன் சென்குப்தா (Dhundhgiri Ke Phool)
சிறந்த ஒளிப்பதிவு: மீனாட்சி சோமன், சரவணமருது (Little Wings)
சிறந்த இயக்கம்: பியூஷ் தாக்கூர் (The First Film)
சிறந்த குறும்படம்: Giddh The Scavenger
சமூக மற்றும் சுற்றுச்சூழல் மதிப்புகளை ஊக்குவிக்கும் சிறந்த அம்சமற்ற படம்: The Silent Epidemic
சிறந்த ஆவணப்படம்: God Vulture and Human
சிறந்த கலை/கலாச்சார படம்: Timeless Tamil Nadu
சிறந்த வாழ்க்கை வரலாற்று/வரலாற்று மறுகட்டமைப்பு படம்: Mo Bou Mo Gaan, Lentina Ao
சிறந்த அறிமுக படம்: The Spirit Dreams of Cheraw
சிறந்த புனைகதை அல்லாத படம்: Flowering Man
Read More : #Breaking : பார்க்கிங் படத்திற்கு 3 தேசிய விருதுகள்.. சிறந்த இசையமைப்பாளர் ஜி.வி பிரகாஷ்..