தமிழக வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணியில் 77,000 அதிகாரிகள்…! தேர்தல் ஆணையம் தகவல்…!

election 2025

தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப்பணி 2026 பிப்ரவரி முதல் வாரம் வரை நடைபெற உள்ளது. வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப்பணிகளில் 77,000 அதிகாரிகள் பணிபுரிவர் என தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் தெரிவித்துள்ளார் .


இந்தியாவில் கடந்த 1951 முதல் 2004 வரை வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தப் பணி 8 முறை மேற்கொள்ளப்பட்டுள்ளது. கடைசியாக கடந்த 2002-04 காலகட்டத்தில் இப்பணி மேற்கொள்ளப்பட்டது. சுமார் 21 ஆண்டுகளுக்கு பிறகு, பிஹார் மாநிலத்தில் சமீபத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணி நடத்தப்பட்டது. இந்த நிலையில், 2026 தொடக்கத்தில் தமிழகம், புதுச்சேரி, கேரளா, மேற்கு வங்கத்திலும் 2027-ம் ஆண்டில் உத்தர பிரதேசம், குஜராத், கோவாவிலும், 2028-ம் ஆண்டில் சத்தீஸ்கர், மத்திய பிரதேசம், ராஜஸ்தான், அந்தமான் – நிகோபர், லட்சத்தீவிலும் சட்டப் பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இதையொட்டி, மேற்கண்ட 12 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணி மேற்கொள்ளப்படுகிறது.

இதற்கான அறிவிப்பை இந்திய தேர்தல் ஆணையம் கடந்த 27-ம் தேதி வெளியிட்டது. 28-ம் தேதி இப்பணி தொடங்கியது. இதன் முதல்கட்டமாக, அக்டோபர் 28 முதல் நவம்பர் 9-ம் தேதி வரை அலுவலர்களுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. நவம்பர் 4 முதல் டிசம்பர் 4 வரை அலுவலர்கள் வீடு வீடாக சென்று ஆய்வு மேற்கொள்கின்றனர். டிசம்பர் 9-ல் வரைவுப் பட்டியல் வெளியிடப்படுகிறது. டிசம்பர் 9 முதல் 2026 ஜனவரி 8 வரை திருத்தப் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. டிசம்பர் 9 முதல் ஜனவரி 31 வரை பட்டியலில் பெயர் நீக்கம் தொடர்பான நோட்டீஸ் வழங்கப்பட்டு விசாரணை நடத்தப்படும். இறுதி வாக்காளர் பட்டியல் பிப்ரவரி 7-ம் தேதி வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் தலைமையில், அனைத்துக் கட்சி பிரதிநிதிகள் உடனான ஆலோனைக் கூட்டம் சென்னை தலைமைச் செயலகத்தில் நேற்று நடைபெற்றது. வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தின்போது மேற்கொள்ளப்படும் பணிகள் குறித்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் விளக்கினார். வீடு வீடாக ஆய்வு செய்து படிவம் வழங்குதல், அவற்றை பூர்த்தி செய்து மீண்டும் பெறுதல், இதற்கான அவகாசம், பட்டியலில் பெயர் இல்லாதவர்களுக்கான நடைமுறை, பெயர் நீக்கப்படும் போது நோட்டீஸ் வழங்குதல் போன்ற பல்வேறு நடைமுறைகள் குறித்து விளக்கினார்.

வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகள் தொடர்பாக மாவட்ட தேர்தல் அதிகாரிகள் முதல் பல்வேறு நிலைகளில் உள்ள அதிகாரிகள் என 77 ஆயிரம் பேருக்கு பயிற்சி அளிக்கப்பட உள்ளது. தமிழக தலைமை தேர்தல் அதிகாரி, மாவட்ட தேர்தல் அதிகாரிகள் மற்றும் வாக்காளர் பதிவு அதிகாரிகளால் இந்த பயிற்சிகள் அளிக்கப்படும் என தெரிவித்துள்ளார்.

Vignesh

Next Post

எவன் கூட பேசிட்டு இருக்க..? கள்ளக்காதலிக்கு வேறொருவருடன் தொடர்பு..!! முகத்தை சிதைத்து கொடூரமாக கொன்ற லாரி கிளீனர்..!!

Thu Oct 30 , 2025
திருப்பூர் மாவட்டம் பழவஞ்சிபாளையம் பகுதியில் தனியாக வசித்து வந்த இளங்கோவன் (40) என்ற லாரி கிளீனருக்கும், திருப்பூர் அரசு மருத்துவமனை சாலையோரம் தங்கியிருந்த மாது (35) என்ற பெண்ணுக்கும் இடையே ஏற்பட்ட கள்ளக்காதல் உறவு, கொலையில் முடிந்துள்ளது. மனைவி மற்றும் குழந்தைகளைப் பிரிந்து தனியாக வாழ்ந்து வந்த இளங்கோவன், மாதுவுடன் பழகி வந்த நிலையில், அவரை தனது வீட்டிற்கே அழைத்து வந்து அடிக்கடி உல்லாசமாக இருந்துள்ளார். சம்பவத்தன்று, மாது நீண்ட […]
Sex 2025 2

You May Like