fbpx

பிரதமரின் நகர்ப்புற வீட்டுவசதித் திட்டத்தின் கீழ், தமிழகத்தில் 6.80 லட்சம் வீடுகளுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது என இணை அமைச்சர் டோக்கன் சாகு தெரிவித்துள்ளார்.

நிலம் மற்றும் குடியிருப்புகள் ஆகியவை மாநில அரசு செயல்படுத்தக் கூடியவை. எனவே, தங்களது குடிமக்களுக்காக வீட்டுவசதி தொடர்பான திட்டங்களை செயல்படுத்துபவை மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள். எனினும், பிரதமரின் நகர்ப்புற வீட்டுவசதித் திட்டத்தின்கீழ் …

மணல் குவாரியில் சட்டவிரோதமாக செம்மண் எடுத்த வழக்கில் அமலாக்கத்துறை அமைச்சர் பொன்முடி, அவரது மகன் கவுதம் சிகாமணியின் ரூ.14.21 கோடி மதிப்பிலான அசையும், அசையா சொத்து முடங்கி உள்ளது.

கடந்த 2006 -2011 திமுக ஆட்சி காலத்தில் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள செம்மண் குவாரிகளில் அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிகமாக செம்மண் எடுத்ததன் மூலம், அரசுக்கு …

பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் வகுப்பினைச் சார்ந்த தனிநபர்கள் மற்றும் குழுக்கள் தங்களது பொருளாதார முன்னேற்றத்திற்காக சாத்தியக் கூறுள்ள சிறு தொழில்கள் மற்றும் வியாபாரம் செய்ய தனிநபர் கடன் மற்றும் குழுக் கடன் திட்டங்களுக்கு தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் மூலம் கடன் உதவி வழங்கி வருகிறது.

விண்ணப்பதாரர் பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் …

நீலகிரியில் கனமழையை அடுத்து உதகை, குந்தா ஆகிய 2 தாலுகா பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழ்நாட்டில் பல்வேறு பகுதிகளில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், தென்காசி உள்ளிட்ட மாவட்டங்களில் நேற்று முதல் கனமழை பெய்து …

“தமிழ்ச் செம்மல் விருது” பெறுவதற்கு தமிழ் ஆர்வலர்களிமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

தமிழ் வளர்ச்சித் துறையில் தமிழ் வளர்ச்சிக்காக அரும்பாடுபடும் ஆர்வலர்களைக் கண்டறிந்து அவர்களின் தமிழ் தொண்டினை பெருமைப்படுத்தி, ஊக்கப்படுத்தும் வகையில் “தமிழ்ச்செம்மல் விருது” 2015-ஆம் ஆண்டு முதல் வழங்கப்பட்டு வருகிறது. தமிழ்ச்செம்மல் விருது பெறுபவர்களுக்கு ரூ.25,000 பரிசுத் தொகையும் தகுதியுரையும் வழங்கப்பட்டு வருகிறது.

2024-ஆம் ஆண்டிற்கான …

பள்ளி அளவில் மேற்கொள்ளப்படும் பணிகள் குறித்த அறிக்கையை EMIS இணையதளம் வாயிலாக புகைப்படத்துடன் பதிவேற்ற செய்ய அரசு உத்தரவிட்டுள்ளது.

ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வித் திட்டத்தின் கீழ் அனைத்து அரசுப் பள்ளிகளின் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த பல்வேறு பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அதன் ஒருபகுதியாக பள்ளி உள்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டம் தமிழக அரசால் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின் …

திருமணமான பெண்களுக்கு வழங்கப்படும் கர்ப்பபதிவு விவரங்களை இனி சுயமாக இணையதளத்தில் பதிவு செய்து கொள்ளலாம்.

இது குறித்து சேலம் மாவட்ட ஆட்சியர் தனது செய்தி குறிப்பில்; திருமணமான பெண்கள் கர்ப்பமடைந்தவுடன் 12 இலக்கு கொண்ட நிரந்தர கர்ப்பப்பதிவு எண்ணை(RCH-ID) PICME இணையதளத்தின் மூலம் தேவைப்படும் விவரங்கள் மற்றும் ஆவணங்களை சமர்ப்பித்து சுயமாக பெற்றுக்கொள்ளலாம். தாய்மார்கள் ஏற்கனவே …

கேரளாவில் இதய நோயால் கடுமையாக பாதிக்கப்பட்டு செயற்கை சுவாசக்கருவி உதவியுடன் இருந்த 13 வயது சிறுமிக்கு 5 மணி நேர இதய மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.

மத்திய அறிவியல் தொழில்நுட்பத் துறையின் கீழ் கேரளாவில் செயல்படும் தன்னாட்சி நிறுவனமான ஸ்ரீ சித்திரை திருநாள் மருத்துவ விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்பக் கழகம், இந்த இதய மாற்று …

வனவிலங்கு தாக்கி உயிரிழப்போரின் குடும்பத்திற்கான கருணைத் தொகை ரூ. 5 லட்சத்தில் இருந்து ரூ.10 லட்சமாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

மனிதர்களுக்கும், யானைகளுக்கும் இடையே ஏற்படும் மோதலை குறைக்கவும், பழிவாங்கும் நோக்கத்தோடு யானைகள் கொல்லப்படுவதை தவிர்க்கவும், அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொள்கிறது. காட்டு யானைகளால் ஏற்படும் சொத்து சேதம், உயிரிழப்புக்கு இழப்பீடு வழங்கப்படுகிறது. இதன் அடிப்படையில், 2023, டிசம்பர் …

மாணவர்களுக்கு மாதம் ரூ.1,000 வழங்கும் ‘தமிழ்ப் புதல்வன்’ திட்டத்துக்கு தமிழக அரசு ரூ.360 கோடி நிதி ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையில்; உயர்கல்வியில் பெண்கள் சேர்க்கையை அதிகரிக்கும் நோக்கில் அறிமுகம் செய்யப்பட்ட ‘மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் புதுமைப்பெண் திட்டம்’ போல, அரசுப் பள்ளி மாணவர்களின் உயர்கல்வி சேர்க்கையை …