800 பாட்டில்களில் இருந்த சரக்கை காலி செய்த எலிகள்!. வர்த்தகர்களின் வினோத குற்றச்சாட்டால் குழம்பிய அதிகாரிகள்!. பின்னணி என்ன?.

Rats 800 bottles liquor 11zon

ஜார்கண்டில் 800 மதுபான பாட்டில்களில் இருந்த சரக்கை எலிகள் குடித்துவிட்டதாக வர்த்தகர்கள் வினோதமாக குற்றம்சாட்டியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது


ஜார்கண்ட் மாநிலத்தின் புதிய மது கொள்கை செப்டம்பர் 1-ஆம் தேதி அமல்படுத்தப்படவுள்ளது. இந்த நிலையில், மாநிலம் முழுவதும் மதுபான கையிருப்பு குறித்து அனைத்து மாவட்ட நிர்வாகங்களும் ஆய்வு செய்து வருகின்றன. அதன்படி, தான்பாத் மாவட்டத்தில் மதுபான கடைகளில் அதிகாரிகள் சோதனை செய்தனர். அதில் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட 802 மதுபான பாட்டில்களின் விற்பனை கணக்கில் காட்டப்படவில்லை என்பதை அறிந்தனர்.

இது குறித்து மதுபான கடைகளை நடத்தி வருபவர்களிடம் விசாரித்த போது, அவர்கள் அளித்த பதிலைக் கேட்ட அதிகாரிகள் அதிர்ச்சியடைந்தனர். அதாவது, அந்த பாட்டிலில் இருந்த மூடியை எலிகள் தின்றுவிட்டு மதுபானம் அனைத்தையும் குடித்து விட்டன எனத் தெரிவித்தனர். இதை நம்பாத அதிகாரிகள் மதுபானம் விற்ற பணத்தை திருப்பி செலுத்த வேண்டும் என உத்தரவிட்டு உள்ளனர்.

இவ்வாறு ஊழலுக்கு எலிகள் மீது குற்றம்சாட்டப்படுவது ஜார்க்கண்டில் இது முதல்முறை அல்ல. போலீஸ் பிடியில் இருந்த 10 கிலோ கஞ்சா மற்றும் 9 கிலோ கஞ்சா இலைகளை காணவில்லை. அவற்றை எலி தின்றுவிட்டதாக போலீசார் நீதிமன்றத்தில் தெரிவித்தனர். ஆனால், இதனை ஏற்காத நீதிமன்றம் போலீசாருக்கு கண்டனம் தெரிவித்துள்ளது.

Readmore: ஃபார்முலா 1 (F1) என்றால் என்ன?. கார்கள், ஓட்டுநர்கள், அணிகள் பற்றி தெரிந்து கொள்ள வேண்டிய முழு விவரங்களும் இதோ!.

KOKILA

Next Post

TN Govt: கோயில் நிதி குறித்து வெள்ளை அறிக்கை கேட்கும் தமிழக பாஜக...!

Mon Jul 14 , 2025
கோயில்களுக்கு வரக்கூடிய நிதி ஆதாரம் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என தமிழக அரசை பாஜக வலியுறுத்தி உள்ளது. இதுகுறித்து பாஜக மாநில செய்தி தொடர்பாளர் ஏ.என்.எஸ்.பிரசாத் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: அரசு நிதியில் கல்லூரிகள் கட்டாமல், கோயில் நிதியில் ஏன் கட்டுகிறீர்கள்? என்று நியாயமான ஒரு கேள்வியை அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி கேட்டிருந்தார். பழனிசாமி, கோயில் நிதியை கல்விக்காக செலவழிக்கக் கூடாது என்கிறார். கல்விக்கு எதிராக […]
tn BJP 2025

You May Like