8 ஆம் வகுப்பு போதும்.. ரூ.40 ஆயிரம் சம்பளம்.. மாவட்ட நல்வாழ்வு மையத்தில் வேலை..!!

job2

தென்காசி மாவட்டம் வீரகேரளம்புதூர் மற்றும் கடையநல்லூர் அரசு மருத்துவமனைகளில் உள்ள யோகா மற்றும் இயற்கை மருத்துவ நலவாழ்வு மையங்களில் Consultant (Yoga and Naturopathy) மற்றும் Attender பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. தேசிய ஆயுஷ் திட்டம் (NAM) மற்றும் தமிழ்நாடு மாநில ஆயுஷ் குழுவின் கட்டுப்பாட்டின்கீழ் இயங்கும் பிரிவுகளில் பணியாற்ற ஒப்பந்த அடிப்படையில் தற்காலிகமாக நிரப்பப்படுகிறது.


காலி பணியிடங்கள்: 2 Consultant (Yoga and Naturopathy) மற்றும் Attender ஒப்பந்த பணியாளர்கள் மாவட்ட நலச்சங்கம் மூலம் ஒப்பந்த அடிப்படையில் தற்காலிகமாக பணியிடத்திற்கு விண்ணப்பிக்கலாம்.

கல்வித்தகுதி: தமிழ்நாடு இந்திய மருத்துவ வாரியம்/TSMC/TNHMC போன்ற மாநில கவுன்சிலால் அங்கீகரிக்கப்பட்ட அரசு அல்லது அரசு அங்கீகரிக்கப்பட்ட தனியார் நிறுவனங்களிலிருந்து Bachelor of Naturopathy and Yogic Sceinces (BNYS) கல்வித்தகுதி பெற்றிருக்க வேண்டும். தமிழ்நாடு இந்திய மருத்துவ வாரியம்/TSMC/TNHMC போன்ற மாநில கவுன்சிலில் பதிவு செய்திருக்க வேண்டும்.

உதவியாளர் (Attender) கல்வித்தகுதி : எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

சம்பளம்: தகுதியான நபர்களுக்கு ரூ.10,000 முதல் ரூ.40,000 வரை சம்பளம் வழங்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை: விண்ணப்ப படிவங்கள் மாவட்ட இணையதளத்தில் (https://tenkasi.nic.in/notice_category/recruitment/ ) பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

அனுப்ப வேண்டிய கடைசி நாள்: பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் 20.08.2025 அன்று மாலை 5 மணிக்குள் நேரிலோ / தபால் மூலமாகவோ மாவட்ட சுகாதார அலுவலர் அலுவலகம், (மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலக வளாகம்), தென்காசி- 627811 என்ற அலுவலக முகவரியில் சமர்ப்பிக்கவேண்டும்.

Read more: உங்கள் வீட்டில் பெண் குழந்தைகள் இருக்கா..? அப்படினா ரூ.50,000 கிடைக்கும்..!! மிஸ் பண்ணிடாதீங்க..!!

English Summary

8th grade pass is enough.. Rs.40 thousand salary.. Work at the District Welfare Center..!!

Next Post

காலையில் தூங்கி எழுந்தவுடன் பல் துலக்காதீங்க..!! இதை முதலில் பண்ணுங்க..!! ஏன் தெரியுமா..?

Wed Aug 13 , 2025
பல் துலக்குவது, வாயின் சுகாதாரத்துக்கு ஆரோக்கியமானது. பெரும்பாலானவர்கள் காலையில் எழுந்தவுடன் பல் துலக்கி தாங்கள் நாளை ஆரம்பிப்பார்கள். சிலர் பல் துலக்கி, காஃபி அல்லது டீ குடிப்பார்கள். மற்றவர்கள் நேரடியாகவே டீ குடிப்பார்கள். ஆனால், ஆயுர்வேதம் கூறும் ஒரு பரிந்துரை தற்போது மருத்துவ உலகத்திலும் கவனம் பெற தொடங்கியுள்ளது. அது தான் “ஆயில் புல்லிங்”. ஆயில் புல்லிங் என்றால் என்ன..? ஆயில் புல்லிங் என்பது, ஒரு மருத்துவ நடைமுறை. இது […]
Tooth Brush 2025

You May Like