உள்ளாட்சி அமைப்புகளில் மாற்றுத் திறனாளிகளுக்கு அறிமுகம் அளித்தல் விழாவில் முதலமைச்சர் ஸ்டாலின் பங்கேற்று உரையாற்றினார்.. அப்போது பேசிய அவர் “ கடந்த கால ஆட்சியில் மாற்றுத் திறனாளிகள் புறக்கணிக்கப்பட்டனர், தகாத வார்த்தையில் அவமரியாதை செய்யப்பட்டனர்.. திமுக ஆட்சியில் மாற்றுத் திறனாளிகளுக்கு சம வாய்ப்பு, சம் உரிமை என்பது உறுதி செய்யப்பட்டது.. கலைஞர் ஆட்சியில் தான் மாற்றுத்திறனாளிகளுக்கு தனித்துறை உருவாக்கப்பட்டது..
மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக 60-க்கும் மேற்பட்ட அரசாணைகள் வழங்கப்பட்டுள்ளன.. உள்ளாட்சி அமைப்புகளில் 1,631 மாற்றுத் திறனாளிகளுக்கு பணி வழங்கப்பட்டுள்ளது.. விளையாட்டுத் துறையில் மாற்றுத் திறனாளிகள் சாதிப்பதற்கு ஏற்ற சூழல் உருவாக்கப்பட்டுள்ளது.. அரசு பணிகளில் உகந்த பணியிடங்கள் கண்டறியப்பட்டு மாற்றுத்திறனாளிகளுக்கு கூடுதல் பணிகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்..
உள்ளாட்சி அமைப்புகளில் மேலும் 9000 மாற்றுத்திறனாளிகள் பணியில் அமர்த்தப்படுவர்.. மாற்றுத் திறனாளி மாணவர்களுக்கான கல்வி உரிமைத் தொகை 2 மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது.. மாற்றுத்திறனாளுக்கு தேவை உரிமை தானே தவிர, கருணை அல்ல..
எத்தனையோ திட்டங்களை மாற்றுத் திறனாளிகளின் நலனுக்காக திராவிட மாடல் அரசு செய்து வருகிறது.. ஊராட்சி அமைப்புகள், ஒன்றிய அமைப்புகள், மாவட்ட அமைப்புகள் என அனைத்திலும் மக்கள் பிரதிநிதிகளாக மாற்றுத் திறனாளிகள் உள்ளனர்.. மாற்றுத்திறனாளிகளை மக்கள் பிரதிநிதிகளாக மாற்றி இருக்கிறோம்.. நீங்கள் அரசின் திட்டங்களில் பயனாளிகள் மட்டுமல்ல, அரசின் பிரதிநிதிகளாக மாற்றுத் திறனாளிகளின் கோரிக்கையை நிறைவேற்றும் இடத்தில் இருக்கிறீர்கள்..
இன்னும் சிலர் பிற்போக்குவாதிகள் மாற்றுத்திறனாளிகள் மக்கள் பிரதிநிதிகளாகி என்ன செய்யப் போகிறார்கள் என்று நினைக்கலாம்.. அவர்களின் தரம் அது தான்.. அதைப் பற்றி கவலைப்பட தேவையில்லை.. எந்த சூழலிலும் நீங்கள் தன்னம்பிக்கையை இழந்துவிடக் கூடாது.. சோர்வடையக் கூடாது. கலைஞரை ஒரு ரோல் மாடலாக எடுத்து கொண்டு செயல்பட வேண்டும்.. கண்ணில் ஏற்பட்ட பாதிப்பு அவர் மனதை பாதிக்கவில்லை.. அவர் முதுமை காலத்தில் சக்கர நாற்காலியில் சுழன்று உழைத்தார்.. இந்த தன்னம்பிக்கை தான் அவசியம்..” என்று தெரிவித்தார்..
Read More : கொஞ்ச மழைக்கே, இவ்வளவு தண்ணீர்.. வடிகால் வசதிகள் செய்யப்படாததே காரணம்.. தமிழக அரசை சாடிய விஜய் !



