98 அடி உயர சுனாமி, 1,99,000 பேர் இறக்கலாம்.. ஜப்பானின் மெகா நிலநடுக்க எச்சரிக்கை..! இந்தியாவுக்கு ஆபத்தா?

us earthquake tsunami warning 11zon

இந்த வாரம் ஜப்பானின் வட பசிபிக் கடற்கரையில் ஏற்பட்ட 7.5 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கத்திற்கு பிறகு, அதே பகுதியில் ஒரு வாரத்திற்குள் மிகப்பெரிய நிலநடுக்கம் ஏற்படும் வாய்ப்பு உள்ளதாக ஜப்பான் அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.


கடந்த திங்கள்கிழமை 7.5 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஆமோரி (Aomori) அருகே, கடலடியில் 54 கிமீ ஆழத்தில் ஏற்பட்டது. சாலைகள் பிளந்தன, கட்டிடங்கள் சேதமடைந்தன, 30-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். டோக்கியோ வரை (550 கிமீ தூரம்) அதிர்ச்சி உணரப்பட்டது. 90,000 பேர் அவசரமாக வெளியேற்றப்பட்டனர். 60–70 செ.மீ உயரம் கொண்ட சிறிய சுனாமி அலைகள் பதிவாகின.

ஜப்பான் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

ஒரு பெரிய நிலநடுக்க பகுதியில 7 என்ற ரிக்டர் அளவுக்கு மேல் சக்தியுள்ள நிலநடுக்கம் ஏற்படும் போது மட்டும் இத்தகைய பெரிய நிலநடுக்க எச்சரிக்கை விடுக்கப்படுகிறது.. இந்த அறிவிப்பு ஹொக்கைடோ – சான்ரிகு (Hokkaido–Sanriku) பிரதேசத்துக்கு முதல் முறையாக வெளியிடப்பட்டுள்ளது. அடுத்த ஒரு வாரத்தில் 8 அல்லது அதற்கு மேல் அளவிலான நிலநடுக்கம் வரக்கூடும் என்ற தற்காலிக அபாய உயர்வு உள்ளது.

ஜப்பான் அரசின் மதிப்பீடுகள், இந்த ஹொக்கைடோ–சான்ரிகு கடல்பகுதியில் மீண்டும் ஒரு பெரிய நிலநடுக்கம் ஏற்படுமானால், சாத்தியமான மிகப்பெரிய பேரழிவுக்கு வழிவகுக்கும்.. 30 மீட்டர் (98 அடி) உயரம் கொண்ட சுனாமி உருவாகலாம். அதாவது இது 10 மாடி கட்டிடம் உயரத்திற்கு சமம். அதிகபட்சம் 1,99,000 பேர் உயிரிழக்க வாய்ப்பு உள்ளது. 2,20,000 கட்டிடங்கள் முற்றிலும் அழியக்கூடும். 31 டிரில்லியன் யென் (சுமார் $198 பில்லியன்) அளவிலான பொருளாதார இழப்பு ஏற்படும்.

குறிப்பாக குளிர்காலத்தில் (winter) விதம் இப்படிப் பெரிய பேரிடர் ஏற்பட்டால், 42,000 பேர் பாதிக்கப்படலாம்.. இந்த எண்கள் அனைத்தும் இப்படிப்பட்ட ஒரு மேகா-நிலநடுக்கம் ஜப்பானில் ஏற்படுத்தும் அழிவின் அளவை மிகத் தெளிவாக காட்டுகின்றன.

வடக்கு தீவு ஹொக்கைடோ முதல் டோக்கியோ அருகிலுள்ள சீபா (Chiba) Prefecture வரை மொத்தம் 182 உள்ளூர் நிர்வாகப் பகுதிகளுக்கு இந்த எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது. இது கடந்த சில ஆண்டுகளில் வெளியிடப்பட்ட அதிக பரபரப்பான மற்றும் பரவலான நிலநடுக்க எச்சரிக்கைகளில் ஒன்றாகும்.

இதை தொடர்ந்து ஜப்பா அரசு மக்களுக்கு பல அறிவுறுத்தல்களை வழங்கி உள்ளது.. அதன்படி, அவசரப் பைகள் அல்லது emergency kits வைத்திருக்க வேண்டும், தப்பிச்செல்லும் பாதைகளைக் (evacuation routes) தெரிந்து கொள்ள வேண்டும்.. சுனாமி எச்சரிக்கைகளுக்குத் தயாராக இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தி உள்ளது.

ஏன் ஜப்பானில் தொடர்ந்து பெரிய நிலநடுக்கங்கள் நடக்கின்றன?

ஜப்பான் உலகின் மிகச் செயலில் உள்ள நிலநடுக்க பகுதிகளில் ஒன்று. ஏனெனில் பசிபிக் தட்டு (Pacific Plate), வட அமெரிக்க தட்டு (North American Plate) மற்றும்
ஒகோத்ஸ்க் தட்டு (Okhotsk Plate), ஆகியவற்றின் கீழ் நுழையும் subduction zone பகுதியில் ஜப்பான் உள்ளது. இந்த தட்டுச் செயல்பாடுகளால் ஏற்படும் அழுத்தம் காலம்தோறும் பெரும் நிலநடுக்கங்களைக் கிளப்புகிறது.

2011 பேரழிவு

2011ல் ஏற்பட்ட 9.0 ரிக்டர் அளவிலான நிலநடுக்கமும் அதனைத் தொடர்ந்து வந்த மாபெரும் சுனாமியும் பேரழிவை ஏற்படுத்தியது.. இதில் 20,000க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.. ஃபுகிஷிமா அணு உலை பேரழிவு போன்ற நாசத்தைக் கொடுத்தது.

இந்த நிலநடுக்கம் இந்தியாவை பாதிக்குமா?

இந்த குறிப்பிட்ட ஜப்பான் நிலநடுக்க எச்சரிக்கையால் இந்தியாவுக்கு நேரடி அபாயம் இல்லை. ஏனென்றால் இது வட பசிபிக் பகுதியில் தாக்கம் ஏற்படுத்தும். குறிப்பாக ரஷ்யாவின் தூர கிழக்கு பகுதி, அலாஸ்காவின் Aleutian தீவுகள், ஜப்பானின் வடக்குக் கடற்கரை ஆகிய பகுதிகள் பாதிக்கப்படும்..

இந்தியாவுக்கு உண்மையான சுனாமி அபாயம் எங்கு உள்ளது?

சுமத்ரா தீவு, அரபிக்கடல் பகுதி பகுதிகள்.. 2004ல் சுமத்ரா அருகே ஏற்பட்ட 9.1 ரிக்டர் நிலநடுக்கம் இந்தியாவின் தமிழ்நாடு, ஆந்திரா, அண்டமானில் பெரும் சுனாமி அழிவை ஏற்படுத்தியது. அதே வகை நிலநடுக்கங்களாலே இந்தியாவுக்கு அதிக சுனாமி அபாயம்.

இந்தியா – நிலநடுக்கம் & சுனாமி முன்னெச்சரிக்கை

ஜப்பானின் இந்த எச்சரிக்கை: இந்தியாவும் பசிபிக் & இந்தியப் பெருங்கடலின் டெக்டானின் ஆபத்து (tectonic risk) பகுதியில்தான் இருக்கிறது.. இயற்கை பேரிடர்களுக்கு முன் தயார்மானம் மற்றும் முன்னெச்சரிக்கை மிக முக்கியம்

இரு நாடுகளும் (இந்தியா – ஜப்பான்) ஆரம்ப எச்சரிக்கை அமைப்புகள், பேரிடர் மேலாண்மை திட்டங்கள், பொதுமக்கள் விழிப்புணர்வு ஆகியவற்றை தொடர்ந்து மேம்படுத்த வேண்டிய தேவை உள்ளது என்பதை நினைவூட்டுகிறது.

RUPA

Next Post

“ரூ.1 லட்சம் கோடியை எடுத்துக்கொள்ளுங்கள்..” நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி அழைப்பு.!

Wed Dec 10 , 2025
இந்திய மத்திய அரசு அக்டோபரில் “உங்கள் பணம், உங்கள் உரிமை” (Your Money, Your Right) பிரச்சாரத்தைத் தொடங்கியது. நாடு முழுவதும் உள்ள வங்கிகளில் பயன்படுத்தப்படாத நிதி சொத்துக்களை மக்களிடம் திருப்பித் தருவதே இதன் நோக்கமாகும். பிரதமர் மோடி இந்த பிரச்சாரத்தை மேலும் முன்னெடுத்துள்ளார் இதன் ஒரு பகுதியாக, பிரதமர் மோடி சமீபத்தில் LinkedIn இல் பதிவிட்டுள்ளார். இந்தப் பதிவின் மூலம், இந்த முயற்சியை மேலும் முன்னெடுத்துச் செல்லுமாறு மக்களை […]
Prime Minister Narendra Modi 1

You May Like