ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா (SBI) வங்கியில் காலியாக உள்ள வாடிக்கையாளர் உறவு நிர்வாகி (Customer Relationship Manager) உள்ளிட்ட பல்வேறு பதவிகளில் 996 காலிப்பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த பணியிடங்கள் SBI SO Recruitment 2025 என்ற பெயரில், சிறப்பு அதிகாரி (Specialist Officer – SO) பிரிவில் ஒப்பந்த அடிப்படையில் நிரப்பப்படுகின்றன.
பணியிட விவரம்:
- VP (SRM) – 506
- AVP (RM) – 206
- வாடிக்கையாளர் உறவு நிர்வாகி – 284
வயது வரம்பு: VP பதவிக்கு குறைந்தபட்சம் 26 முதல் 42 வயது வரை இருக்கலாம். AVP பதவிக்கு குறைந்தபட்சம் 23 – 35 வயது வரை இருக்கலாம். வாடிக்கையாளர் உறவு நிர்வாகி பதவிக்கு 20-35 வயது வரை இருக்கலாம்.
கல்வித் தகுதி:
VP (Vice President) பதவி:
- ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும்
- எம்பிஏ (MBA) அல்லது NISM V-A, NISM XXI-A, CFP / CFA
- போன்ற சான்றிதழ் படிப்புகள் முடித்தவர்களுக்கு முன்னுரிமை
- அதிகபட்சம் 6 ஆண்டுகள் வரை அனுபவம் பெற்றிருக்க வேண்டும்
AVP (Assistant Vice President) பதவி:
- ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு
- அதனுடன் நிதி / மார்க்கெட்டிங் / வங்கி துறையில் முதுகலை பட்டப்படிப்பு
- NISM V-A, NISM XXI-A, CFP / CFA
- சான்றிதழ் படிப்புகள் முடித்தவர்களுக்கு முன்னுரிமை
- குறைந்தபட்சம் 2 ஆண்டு அனுபவம் அவசியம்
வாடிக்கையாளர் உறவு நிர்வாகி;
- ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும்
- அனுபவம் பெற்றிருப்பது சிறந்தது
- 2 சக்கர வாகன ஓட்டுநர் உரிமம் கட்டாயம்
சம்பளம்: VP பதவிக்கு ஆண்டுக்கு 44.70 லட்சம் வழங்கப்படும். AVP பத்விக்கு 30.20 லட்சம் இருக்கும். அதே போன்று, வாடிக்கையாளர் உறவு நிர்வாகி பதவிக்கு வருடத்திற்கு 6.20 லட்சம் வரை சம்பளம் வழங்கப்படும்.
தேர்வு செய்யப்படும் முறை: இப்பணியிடங்களுக்கு எழுத்துத் தேர்வு நடத்தப்படாது. விண்ணப்பதாரர்களில் இருந்து தகுதியின் அடிப்படையில் நேர்காணலுக்கு அழைக்கப்படுபவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். யாருக்கு நேர்காணல் அழைப்பு வழங்க வேண்டும் என்பதை SBI வங்கி தானாக முடிவு செய்யும்.
எப்படி விண்ணப்பிப்பது? இப்பணியிடங்களுக்கு https://sbi.bank.in/ என்ற இணையதளத்தில் ஆன்லைன் வழியாக பதிவு செய்து விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பிக்க கடைசி நாள்: 23.12.2025.



