fbpx

ஆசிரியர் தகுதித் தேர்வு..! திருத்தங்கள் மேற்கொள்ள கடைசி தேதி என்ன தெரியுமா?

ஆசிரியர் தகுதித் தேர்வு விண்ணப்பங்களில் திருத்தம் செய்ய விரும்பும் தேர்வர்கள், வரும் 11ஆம் தேதி முதல் 16ஆம் தேதி வரை திருத்தங்களை மேற்கொள்ளலாம் என ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது.

இந்திய அரசால் இயற்றப்பட்ட குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் 2009-ன் படி, ஆசிரியர் நியமனத்திற்கான குறைந்தபட்சக் கல்வித் தகுதியாக ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். தமிழகத்தில், இதற்கான தேர்வை ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தி வருகிறது. இந்நிலையில், இந்தாண்டு ஆசிரியர் தகுதித்தேர்வு தாள் 1 மற்றும் தாள் 2 எழுதுவதற்கான அறிவிப்பு கடந்த மார்ச் 7ஆம் தேதி வெளியானது. இதற்கான விண்ணப்பங்கள் மார்ச் 14ஆம் தேதி முதல் ஏப்ரல் 26ஆம் தேதி வரை பெறப்பட்டன.

TN: Despite Collecting Fees During Pandemic, Private Schools Leave Teachers  Underpaid | NewsClick

இந்நிலையில், ஆசிரியர் தகுதித் தேர்வு விண்ணப்பங்களில் திருத்தம் செய்ய விரும்பும் தேர்வர்கள், தாள்-1, தாள் 2-க்கு வரும் 11ஆம் தேதி முதல் 16ஆம் தேதி வரை ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் திருத்தங்களை மேற்கொள்ளலாம். மேலும், ஆசிரியர் தகுதித் தேர்வு தாள் 1-க்கு 2,30,878 பேரும், தாள் 2-க்கு 4,01,886 என மொத்தமாக 6,32,764 பேர் விண்ணப்பித்துள்ளனர் என ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது.

Chella

Next Post

"அடுத்த ஷாக் நியூஸ்" ஆட்டோக்களுக்கு மீட்டர் கட்டணம் ரூ.25லிருந்து ரூ.30 ஆக உயர்த்தப்படும்...! போக்குவரத்து அமைச்சர் அறிவிப்பு...!

Sun Jul 3 , 2022
தலைநகர் டெல்லியில் டாக்ஸி மற்றும் ஆட்டோ சவாரிகளுக்கு கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய போக்குவரத்து அமைச்சர் கைலாஷ் கெலாட்; தலைநகர் டெல்லியில் டாக்ஸி மற்றும் ஆட்டோ சவாரிகளுக்கு கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. டாக்ஸி சவாரிக்கான அடிப்படைக் கட்டணம் ரூ. 15 உயரும். மேலும், மூன்று சக்கர வாகனங்கள் கிலோமீட்டருக்கு ரூ. 1.5 கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படும். புதிய கட்டணங்கள் குறித்து வரும் அமைச்சரவை கூட்டத்தில் விவாதிக்கப்படும். ஏப்ரல் 2022 […]

You May Like