fbpx

அனைத்து மாவட்டங்களிலும் புத்தக கண்காட்சி..! தமிழக அரசு வெளியிட்ட முக்கிய அரசாணை..!

அனைத்து மாவட்டங்களிலும் புத்தக கண்காட்சி நடத்த ரூ.4.96 கோடி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

கடந்த மார்ச் மாதம் 2022-23ஆம் ஆண்டுக்கான தமிழக பட்ஜெட்டில் பள்ளிக்கல்வித்துறைக்கு ரூ. 36 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதன் மூலம் அனைத்து மாவட்டங்களிலும் புத்தக கண்காட்சி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி, தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் புத்தக கண்காட்சி நடத்த 4.96 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்தது. மதுரை, நெல்லை, கோவை, திருச்சி, ஈரோடு, சேலம், திருப்பூர் ஆகிய மாவட்டங்களுக்கு தலா ரூ.17.50 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டது. அதேபோல் வேலூர், தூத்துக்குடி, தஞ்சை, திண்டுக்கல், நாகர்கோவில், கடலூர், கரூர் மாவட்டங்களுக்கு தலா ரூ.14 லட்சம் ஒதுக்கீடு செய்யப்படும். மீதமுள்ள 23 மாவட்டங்களுக்கு தலா ரூ.12 லட்சமும் ஒதுக்கீடு செய்து உத்தரவிட்டது.

புதிய தலைமைச் செயலாளர், உளவுத்துறை ஐ.ஜி, சென்னை போலீஸ் கமிஷனர் யார் யார்? |  Race begins for new chief secretary, IG intelligence and chennai police  commissioner posts

இந்நிலையில், சென்னையை போன்று அனைத்து மாவட்டங்களிலும் புத்தக கண்காட்சி நடத்த ரூ.4.96 கோடி நிதி ஒதுக்கி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. மாநில அளவில் புத்தக கண்காட்சி நடத்த பள்ளிக்கல்வித்துறை ஆணையர் தலைமையில் 6 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்தக் குழுவில் நூலகத்துறை, பாடநூல் கழகம், பதிப்பாளர் சங்கம் உறுப்பினராக நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

Chella

Next Post

மாணவிகள் உள்பட 40 பெண்களுக்கு பாலியல் தொல்லை..! அரசுப் பள்ளி ஆசிரியருக்கு வலைவீச்சு..!

Sun Jul 3 , 2022
கர்நாடகாவில் மாணவிகள் உட்பட 40 பெண்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்த அரசுப் பள்ளி ஆசிரியரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். கர்நாடக மாநிலம் ராய்ச்சூர் மாவட்டம் சிந்தனூர் தாலுகா சிங்கபுரா கிராமத்தில் அரசு உயர் தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு ஆசிரியராக பணியாற்றி வருபவர் முகமது அசாருதீன். இவர் கொப்பல் மாவட்டம் கரடகி நகரில் வசித்து வந்தார். இந்நிலையில், முகமது அசாருதீன், தன்னுடன் பணியாற்றும் ஆசிரியை ஒருவருடன் உல்லாசமாக இருந்துள்ளார். […]
மாணவிகள் உள்பட 40 பெண்களுக்கு பாலியல் தொல்லை..! அரசுப் பள்ளி ஆசிரியருக்கு வலைவீச்சு..!

You May Like