fbpx

“ நுபுர் ஷர்மாவின் தலையை கொண்டு வந்தால்.. என் சொத்துக்களை தருகிறேன்..” சர்ச்சை வீடியோவை வெளியிட்ட நபர்…

ராஜஸ்தானின் அஜ்மீரை சேர்ந்த ஒருவர் சர்ச்சைக்குரிய வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார், அதில் முகமது நபி குறித்து சர்ச்சைக்குரிய கருத்துகளை தெரிவித்த பாஜக முன்னாள் செய்தித் தொடர்பாளர் நுபுர் சர்மாவின் தலையை துண்டிப்பவருக்கு தனது வீடு மற்றும் சொத்துக்களை பரிசாக வழங்குவதாக அறிவித்துள்ளார். அந்த நபர் சல்மான் சிஷ்டி என அடையாளம் காணப்பட்டதாக கூறப்படுகிறது. வைரலான வீடியோவில், நுபுர் சர்மாவின் தலையை கொண்டு வருபவர்களுக்கு தனது வீடு மற்றும் சொத்துக்களை தருவதாக அவர் கூறுவதைக் கேட்க முடிகிறது.

நாடு முழுவதும் முஸ்லிம்கள் துன்புறுத்தப்பட்டு கொல்லப்படுகிறார்கள் என்றும் அவர் குற்றம் சாட்டினார். இந்த வீடியோ வைரலானதை அடுத்து, கூடுதல் காவல் கண்காணிப்பாளர் விகாஸ் சங்வான், தனக்கும் வாட்ஸ்அப் மூலம் இந்த வீடியோ கிடைத்துள்ளதாக தெரிவித்தார். அந்த வீடியோவில் சல்மான் சிஷ்டி என்ற நபர் போதையில் காணப்படுகிறார் என்றும், அதை போலீசார் மிகவும் தீவிரமாக எடுத்துக்கொண்டதாகவும் அவர் கூறினார்.

இது தொடர்பாக அஜ்மீர் போலீசார் தர்கா மற்றும் அஞ்சுமான் அதிகாரிகளிடமும் பேசினர். குற்றம் சாட்டப்பட்ட சல்மான் சிஷ்டி தர்கா காவல் நிலையப் பகுதியில் வசிப்பவர் என்றும் அவர் விரைவில் கைது செய்யப்பட்டு அவர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் விகாஸ் சங்வான் கூறினார்.

முன்னதாக கடந்த 28-ம் தேதி நுபுர் சர்மாவுக்கு ஆதரவாக ஒரு சமூக ஊடகங்களில் பதிவிட்ட உதய்பூரை சேர்ந்த தையல்கடை காரர் இருவரால் தலை துண்டிக்கப்பட்டு கொல்லப்பட்டார்.

தற்போது கட்சியில் இருந்து நீக்கப்பட்ட பாஜக தலைவர் நுபுர் சர்மா, ஞானவாபி விவகாரம் குறித்த தொலைக்காட்சி செய்தி விவாதத்தின் போது நபிகள் நாயகத்திற்கு எதிராக ஆட்சேபனைக்குரிய கருத்துக்களைத் தெரிவித்திருந்தார்.. இதையடுத்து நுபுர்ஷர்மா மீது பல காவல்நிலையங்களில் புகாரளிக்கப்பட்டது.. மேலும் பஞ்சாப், டெல்லி, மகாராஷ்டிரா, குஜராத், மேற்கு வங்கம், ஜார்கண்ட் மற்றும் உத்தரபிரதேசம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களிலும் நுபுர் ஷர்மா கைது செய்யப்பட வேண்டும் என்று போராட்டங்கள் நடைபெற்றது.. மேலும் பல்வேறு அரபு நாடுகளும் இந்தியாவுக்கு கண்டனம் தெரிவித்திருந்தன என்பது குறிப்பிடத்தக்கது..

Maha

Next Post

இனி சாப்பிடும் உணவுக்கு வரி வசூலித்தால்...! ஹோட்டல்கள், உணவகங்களுக்கு கடும் எச்சரிக்கை..!

Tue Jul 5 , 2022
ஹோட்டல்கள் மற்றும் உணவகங்களில் சேவைக் கட்டணம் வசூலிக்க மத்திய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையம் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. சில மாதங்களுக்கு முன் ஹைதராபாத்தில் உணவகம் ஒன்றில் சேவைக் கட்டணம் வசூலித்ததை எதிர்த்து ஒருவர் நுகர்வோர் நீதிமன்றத்தை நாடி, தான் செலுத்திய சேவைக் கட்டணத்தை திரும்பப் பெற்றார். மத்திய அரசும் சேவைக் கட்டணம் வசூலிக்கக் கூடாது என்று உணவகங்களுக்கு அறிவுறுத்தியது. இந்நிலையில், நியாயமன்ற வர்த்தக நடைமுறைகள் மற்றும் நுகர்வோர் உரிமை மீறல்களைத் […]

You May Like