கர்நாடகாவில் கனமழை தொடர்வதால் இன்று 2 மாவட்டங்களில் உள்ள கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது..
கர்நாடகாவின் கடலோர மாவட்டங்களான தட்சிண கன்னடா, உடுப்பி ஆகிய மாவட்டங்களில் இடைவிடாத மழை பெய்து வருவதால் நிலச்சரிவு மற்றும் வீடுகள் சேதமடைந்துள்ளன. உடுப்பி மாவட்டத்தில் உள்ள குந்தாப்பூர், மறவந்தே ஆகிய கடற்கரைகளிலும், உல்லால் உள்ளிட்ட பல பகுதிகளிலும் கடல் அரிப்பு ஏற்பட்டுள்ளது. சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடுவதால், பல இடங்களில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கி உள்ளது..
இந்நிலையில் தட்சிண கன்னடா மற்றும் உடுப்பி மாவட்ட நிர்வாகங்கள் அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தொடர் மழை காரணமாக நேற்றும் அந்த மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டன.. அடுத்த இரண்டு நாட்களுக்கு தட்சிண கன்னடா மாவட்டத்திற்கு வானிலை மையம் ஆரஞ்சு எச்சரிக்கையை விடுத்துள்ளது.. இதே போல் உடுப்பி மாவட்டத்தில் கனமழை தொட்ரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.. இதனால் இந்த 2 மாவட்டங்களில் உள்ள அனைத்து தனியார் மற்றும் அரசு கல்லூரிகள் மற்றும் பள்ளிகளுக்கு புதன்கிழமை விடுமுறை அளிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது..