fbpx

மேக வெடிப்பு.. கொட்டி தீர்த்த அதீத கனமழை… வெள்ளத்தில் தத்தளிக்கும் மக்கள்…

தென் மேற்கு பருவமழை தொடங்கி உள்ள நிலையில் டெல்லி, மகாராஷ்டிரா, அசாம் உள்ளிட்ட மாநிலங்களில் தொடர் மழை பெய்து வருகிறது.. குறிப்பாக அசாம், இமாச்சல பிரதேசம் உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்கள் வெள்ளக்காடாக காட்சியளிக்கின்றன.. இந்நிலையில் இமாச்சல பிரதேசத்தின் குலு மாவட்டத்தின் பார்வதி பள்ளத்தாக்கில் உள்ள சோஜ் நுல்லா என்ற கிராமத்தில் மிகப்பெரிய மேக வெடிப்பு ஏற்பட்டது..

இதனால் அதீத கனமழை கொட்டி தீர்த்ததால் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதன் காரணமாக சிக்கி 3 பேர் உயிரிழந்ததாகவும் இதுவரை 6 பேர் காணாமல் போயுள்ளனர் என்று பேரிடர் மேலாண்மை அதிகாரி தெரிவித்தார். மேலும் ஏராளமான வீடுகள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டதாகவும் முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

பார்வதி ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால், சில முகாம் இடங்களும் அடித்துச் செல்லப்பட்டன. ஒரு சில சுற்றுலாப் பயணிகள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டதாக அப்பகுதி மக்கள் அச்சப்படுகின்றனர். கிராமத்தை இணைக்கும் பாலமும் சேதமடைந்துள்ளது. ஆற்றின் கரையோரம் இருந்த ஆறு ஓட்டல்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன. எனவே மீட்பு படையினர் அப்பகுதிக்கு விரைந்துள்ளனர்.. மீட்புப் பணிகளை முடுக்கிவிட அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர்..

Maha

Next Post

ஜூலை 11 அதிமுக பொதுக்குழுவுக்கு தடை விதிக்க முடியாது - உச்சநீதிமன்றம்

Wed Jul 6 , 2022
சென்னையில் கடந்த 23ஆம் தேதி அதிமுக பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் 23 தீர்மானங்கள் தவிர மற்ற தீர்மானங்களை நிறைவேற்ற கூடாது என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால், பொதுக்குழு கூட்டத்தில் 23 தீர்மானங்களும் நிராகரிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. மேலும், அடுத்த பொதுக்குழு கூட்டம் ஜூலை 11ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், நீதிமன்ற உத்தரவை மீறி நடந்த பொதுக்குழு கூட்டத்துக்கு தடை விதிக்க கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் சண்முகம் […]

You May Like