fbpx

சமையல் எண்ணெய் விலை அதிரடி குறைப்பு..! உற்பத்தியாளர்களுக்கு மத்திய அரசு உத்தரவு…!

சமையல் எண்ணெய் விலையை குறைக்குமாறு உற்பத்தியாளர்களுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

இந்தியா தனது சமையல் எண்ணெய் தேவையில், 60 சதவீதத்தை இறக்குமதி செய்து வருகிறது. கடந்த சில மாதங்களாக, சர்வதேச சந்தையில் விலை அதிகரித்து வந்ததால், இந்தியாவில் அதன் சில்லரை விலையும் அதிகரித்தது. ஆனால், சமீபகாலமாக சர்வதேச சந்தையில் விலை குறைந்து வருகிறது. அதனால், இந்தியாவில் கடந்த மாதம் லிட்டருக்கு ரூ.10 முதல் ரூ.15 வரை விலை குறைக்கப்பட்டது. அதன் பிறகும் சர்வதேச சந்தை விலை குறைந்திருப்பதால், இதுகுறித்து விவாதிக்க மத்திய உணவு செயலாளர் சுதன்சு பாண்டே, அனைத்து சமையல் எண்ணெய் உற்பத்தியாளர் சங்கங்கள் மற்றும் பெரும் உற்பத்தியாளர்களுடன் நேற்று ஆலோசனை நடத்தினார்.

சமையல் எண்ணெய் விலை அதிரடி குறைப்பு..! உற்பத்தியாளர்களுக்கு மத்திய அரசு உத்தரவு...!

பின்னர், சுதன்சு பாண்டே ஒரு செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில், “கடந்த ஒரு வாரத்தில் மட்டும், சர்வதேச சந்தையில் சமையல் எண்ணெய் விலை 10 சதவீதம் குறைந்திருப்பதால், அதன் பலனை வாடிக்கையாளர்களுக்கு அளிக்குமாறு வலியுறுத்தினோம். விலையை 10 ரூபாய் குறைக்குமாறு கூறியுள்ளோம். அதற்கு பெரும் உற்பத்தியாளர்கள், அடுத்த வாரத்துக்குள் பாமாயில், சோயாபீன், சன்பிளவர் ஆயில் போன்ற இறக்குமதி செய்யப்பட்ட அனைத்து எண்ணெய்களின் விலையை ரூ.10 குறைப்பதாக உறுதி அளித்தனர். இந்த எண்ணெய்கள் விலை குறைந்தால், இதர சமையல் எண்ணெய்கள் விலையும் குறைந்துவிடும். மேலும், ஒரே கம்பெனியின் சமையல் எண்ணெய் விலை, வெவ்வேறு மண்டலங்களில் ரூ.3 முதல் ரூ.5 வரை வேறுபாடாக இருக்கிறது. எனவே, நாடு முழுவதும் ஒரே மாதிரி விலையை நிர்ணயிக்குமாறு கூறியுள்ளோம். அவர்களும் ஒப்புக்கொண்டனர்.” இவ்வாறு அவர் கூறினார்.

Chella

Next Post

’தங்களது பிள்ளைகள் எப்படி படிக்கிறார்கள் என்பதை இனி செல்போனிலும் பார்க்கலாம்’..! புதிய வசதி அறிமுகம்

Thu Jul 7 , 2022
வகுப்பறையின் நேரடி காட்சிகளை பெற்றோர் தங்கள் வீடுகளில் இருந்தபடியே செல்போன் மற்றும் கணினி வழியாக பார்க்கும் புதிய வசதி ஏற்படுத்தப்படுகிறது. டெல்லியில் உள்ள அரசுப் பள்ளிகளில் சிசிடிவி கேமரா பொருத்தப்படும் என கடந்த 2019ஆம் ஆண்டு அம்மாநில அரசு அறிவித்தது. இந்த திட்டத்திற்கான பணியை பொதுப்பணித்துறை செய்து வருகிறது. இது தொடர்பாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவிக்கையில், ”டெல்லியில் புதிதாக பள்ளிகள் மற்றும் வகுப்பறைகள் கட்டும் பணியை பொதுப்பணித்துறை மேற்கொண்டு வருகிறது. […]
அடடே சூப்பர்..! செமஸ்டர் தேர்வில் இது கட்டாயமாம்..! உயர்கல்வித்துறை அதிரடி உத்தரவு..!

You May Like