fbpx

மீண்டும் தீவிரமடையும் போராட்டம்.. இலங்கை அதிபர் கோட்டபய ராஜபக்ச தப்பியோட்டம்…

இலங்கையில் அரசுக்கு எதிரான போராட்டம் தீவிரமடைந்து வரும் நிலையில், அதிபர் கோட்டபய ராஜபக்ச தனது அதிகாரப்பூர்வ மாளிகையைவிட்டு தப்பியோடி உள்ளார்..

வரலாறு காணாத மிக மோசமான பொருளாதார நெருக்கடியை இலங்கை எதிர்கொண்டுள்ளது. அந்நியச் செலாவணி கையிருப்பு குறைந்துள்ளதால், அத்தியாவசியப் பொருட்களை இறக்குமதி செய்ய முடியாத சூழலில் இலங்கை சிக்கித் தவிக்கிறது. பொருளாதார நெருக்கடியால் எரிபொருள், உணவுப் பொருட்கள், மருந்துப் பொருட்களுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டு, அண்மையில் பெட்ரோல், டீசல், கோதுமை மாவு, உணவு வகைகள், சமையல் எரிவாயு சிலிண்டர்களின் விலை மற்றும் ஏனைய அனைத்துப் பொருட்களின் விலைகளும் உயர்த்தப்பட்டது. இதனால் இலங்கை மக்கள் கடும் சிரமங்களை சந்தித்து வருகின்றனர்..

அடுத்த வருடம் இலங்கையில் உணவுத் தட்டுப்பாடு? கடும் எச்சரிக்கை - லங்காசிறி  நியூஸ்

மேலும் பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காணாததால் அதிபர் கோட்டபய பதவிவிலக வலியுறுத்தி மக்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.. எதிர்க்கட்சியினர் மட்டுமின்றி, மாணவர்கள், கிரிக்கெட் வீரர்கள், பிரபலங்கள் என பல்வேறு தரப்பினரும் போராட்டம் நடத்தி வருகின்றனர்.. இதனால் இலங்கையில் போராட்டம் மீண்டும் தீவிரமடைந்துள்ளது..

எனவே பல இடங்களில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.. எனினும் இன்று காலை நாட்டின் பல பகுதிகளில் இருந்து வந்த ஆர்ப்பாட்டக்காரர்கள் தடையை மீறி அதிபர் மாளிகைக்குள் முற்றுகையிட முயன்றனர்.. இதையடுத்து நிலையை கட்டுப்படுத்த போலீசார் கண்ணீர் புகைக்குண்டுகளை வீசினர்.. மேலும் வானை நோக்கி துப்பாக்கியால் சுட்டும், தடியடி நடத்தியும் போராட்டக்காரர்களை கலைத்தனர்.. இதில் காயமடைந்த பலர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்..

இந்நிலையில் இலங்கை அதிபர் கோட்டபய ராஜபக்ச தனது அதிகாரப்பூர்வ மாளிகையைவிட்டு தப்பியோடி உள்ளார்.. கொழும்புவில் உள்ள மாளிகையை போராட்டக்காரர்கள் முற்றுகையிட்ட நிலையில் கோட்டபய ராஜபக்ச தப்பியோடியதாக கூறப்படுகிறது.. தற்போது கோட்டபய ராணுவ தலைமையகத்தில் கோட்டபய ராஜபக்ச பாதுகாப்பாக இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.. இதனால் இலங்கையில் தொடர்ந்து அசாதாரண சூழல் நிலவுகிறது..

Maha

Next Post

தமிழக பள்ளிகளில் இந்த நடைமுறை ரத்து.. வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு..

Sat Jul 9 , 2022
பள்ளிகளில் வேலைவாய்ப்புக்காக பதிவு செய்யும் நடைமுறை ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.. உயரதிகாரிகள் கலந்து கொண்ட கூட்டத்தின் முடிவின் அடிப்படையில் இந்த முடிவு எடுக்கப்படுவதாக வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை அறிவித்துள்ளது.. அதன்படி பள்ளிகளியேயே வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்யும் நடைமுறை ரத்து செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.. 10 மற்றும் 12-ம் வகுப்பு முடித்த மாணவர்கள் www.tnvelaivaaipu.gov.in என்ற இணையதளத்தில் வேலைவாய்ப்பு பதிவு செய்து கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.. மேலும் வேலைவாய்ப்பு பதிவு, கூடுதல் […]

You May Like