fbpx

தீவிரமடைந்த போராட்டம்.. மாலத்தீவில் இருந்து சிங்கப்பூர் செல்ல அதிபர் கோட்டபய ராஜபக்ச திட்டம்..

மாலத்தீவில் இருந்து சிங்கப்பூர் செல்ல அதிபர் கோட்டாபய ராஜபக்ச தயாராகி வரும் நிலையில் இலங்கையில் போராட்டங்கள் தீவிரமடைந்துள்ளன..

வரலாறு காணாத மிக மோசமான பொருளாதார நெருக்கடியை இலங்கை எதிர்கொண்டுள்ளது. எனினும் தற்போது வரை பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காணாததால் அதிபர் கோட்டபய பதவி விலக வலியுறுத்தி மக்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.. இதனால் இலங்கையில் போராட்டம் மீண்டும் தீவிரமடைந்த நிலையில், தற்போது அதிபரின் செயலகம், அதிபர் மாளிகை போராட்டக்கார்களின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ளது. ஆனால் அதற்கு முன்பே இலங்கை அதிபர் கோட்டபய ராஜபக்ச அதிபர் மாளிகையைவிட்டு தப்பியோடிவிட்டார்..

இந்நிலையில் தனது குடும்ப உறுப்பினர்கள் 5 பேர் மற்றும் 3 ஊழியர்களுடன் கோட்டபய ராஜபக்ச நாட்டை விட்டு வெளியேறி, மாலத்தீவில் தஞ்சம் புகுந்துள்ளார்.. ஆனால் அதிபர் பதவியில் இருந்து விலகாமல் கோட்டபய மாலத்தீவு தப்பி சென்றதால் இலங்கையில் போராட்டம் தொடர்ந்து வருகிறது.. மேலும் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவும் உடனே பதவி விலக் வேண்டும் என்று கோரி போராட்டம் நடைபெற்று வருகிறது..

இதனிடையே இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பதவி விலக மறுத்துள்ள நிலையில், இலங்கையில் போராட்டங்கள் தீவிரமடைந்து வருகின்றன.. அதிபர் மாளிகை, பிரதமர் அலுவலகம், பிரதமரின் இல்லம் மற்றும் அரச ஒளிபரப்பு நிலையங்களை போராட்டக்காரர்கள் கையகப்படுத்தியுள்ளனர். காவல்துறையினரும் பாதுகாப்புப் படையினரும் போராட்டக்காரர்களுக்கு எதிராக எந்தவிதமான கடுமையான நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை.

இந்தப் போராட்டம் தீவிரமடைந்ததைத் தொடர்ந்து, விக்கிரமசிங்கே இலங்கையில் அவசரகால நிலையைப் பிரகடனம் செய்தார். சட்டம் ஒழுங்கை மீட்டெடுக்க தேவையான அனைத்தை நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும் காவல்துறைக்கு உத்தரவிட்டார். இலங்கையின் இடைக்கால அதிபராக பிரதமர் ரணில் விக்ரம சிங்கவை கோட்டபய ராஜபக்ச நியமித்துள்ளார்.. இதையடுத்து பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, இலங்கையின் இடைக்கால ஜனாதிபதியாக பொறுப்பேற்றுள்ளதாக தெரிகிறது..

இதற்கிடையில், மாலத்தீவில் அரசாங்கம் ராஜபக்சேவுக்கு “புகலிடம்” அளித்ததாகக் கூறப்பட்டதைத் தொடர்ந்து போராட்டங்கள் வெடித்தன. மாலத்தீவு அதிபர் இப்ராகிம் சோலி ராஜபக்சேவை இலங்கைக்கு திருப்பி அனுப்ப வேண்டும் என்று போராட்டக்காரர்கள் வலியுறுத்தினர். எவ்வாறாயினும், மாலத்தீவு அரசாங்க அதிகாரி ஒருவர், கோட்டபய ராஜபக்ச விரைவில் ஒரு புதிய இடத்திற்குச் செல்வார் என்று கூறினார்.

இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்ச சிங்கப்பூருக்குச் செல்ல அனுமதி கோரியதை அடுத்து புதன்கிழமை இரவு மாலைதீவு விமான நிலையத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. இன்று அவர் சிங்கப்பூர் செல்ல உள்ளதாக கூறப்படுகிறது.. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, பிரதமர் ரணில் விக்கிரமசிங்கபதவி விலகாததால், இன்றும் போராட்டங்கள் தொடர்ந்து வருகின்றன..

Maha

Next Post

நாடாளுமன்றத்தில் இனி இந்த வார்த்தைகளை பயன்படுத்தக் கூடாது..! மக்களவை செயலகம் அதிரடி..!

Thu Jul 14 , 2022
நாடாளுமன்றத்தில் பயன்படுத்தக் கூடாத வார்த்தைகள் அடங்கிய புத்தகத்தை மக்களவை செயலகம் வெளியிட்டுள்ளது. நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் வருகிற 18ஆம் தேதி தொடங்க இருக்கிறது. இந்நிலையில், மக்களவையிலும், மாநிலங்களவையிலும் பயன்படுத்தக் கூடாத வார்த்தைகள் அடங்கிய புத்தகத்தை மக்களவை செயலகம் வெளியிட்டுள்ளது. அதில், ”வெட்கக்கேடு, திட்டினார், துரோகம் செய்தார், ஊழல், ஒட்டுகேட்பு ஊழல், கொரோனா பரப்புபவர், வாய்ஜாலம் காட்டுபவர், நாடகம், கபட நாடகம், திறமையற்றவர், அராஜகவாதி, சகுனி, சர்வாதிகாரம், சர்வாதிகாரி, அழிவு சக்தி, […]
நாடாளுமன்றத்தில் இனி இந்த வார்த்தைகளை பயன்படுத்தக் கூடாது..! மக்களவை செயலகம் அதிரடி..!

You May Like