முதலமைச்சர் ஸ்டாலின் இன்று அல்லது நாளை மருத்துவமனையில் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்..
நாடு முழுவதும் இன்று முதல் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் இலவச பூஸ்டர் டோஸ் செலுத்தும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.. இன்று முதல் 75 நாட்களுக்கு மட்டுமே பூஸ்டர் டோஸ் இலவசமாக கிடைக்கும். நாடு விடுதலைபெற்று 75 ஆண்டுகள் ஆவதையொட்டி 75நாட்களுக்கு இலவச பூஸ்டர் டோஸ் போடப்படுகிறது. அதன்படி ஜூலை 15 முதல் 75 நாள் இலவச தடுப்பூசி பிரச்சாரம் நடத்தப்படும், இதில் 18 வயதுக்கு மேற்பட்ட அனைத்து குடிமக்களுக்கும் அரசு மையங்களில் இலவச தடுப்பூசி பூஸ்டர் டோஸ் செலுத்தப்படும்…
இந்நிலையில் 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு இலவச பூஸ்டர் தடுப்பூசி செலுத்தும் திட்டத்தை மருத்துவத்துறை அமைச்சர் சென்னையில் தொடங்கி வைத்தார்.. பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் “ தமிழகத்தில் வரும் 24-ம் தேதி மெகா தடுப்பூசி முகாம் நடைபெற உள்ளது.. அதில் முதல் தவணை, 2-ம் தவணை, பூஸ்டர் டோஸ் என 3 தடுப்பூசியும் போடப்பட உள்ளது.. 2590 இடங்களில் அரசு மருத்துவமனைகளில், அரசு கோவிட் மையங்களில் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.. பொதுமக்கள் இதை பயன்படுத்தி தடுப்பூசி செலுத்தி கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்..” என்று தெரிவித்தார்..
தொடர்ந்து முதலமைச்சர் ஸ்டாலினின் உடல்நிலை குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.. அதற்கு பதிலளித்த அமைச்சர், முதலமைச்சர் நன்றாக இருக்கிறார் என்றும், பொதுவான பரிசோதனைக்காகவே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்றும் கூறினார்.. மேலும் முதலமைச்சர் இன்று அல்லது நாளை மருத்துவமனையில் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என்றும் தெரிவித்தார்..