fbpx

சர்ச்சையை ஏற்படுத்திய சாதி தொடர்பான கேள்வி… உரிய நடவடிக்கை எடுக்கப்படும்… உயர்கல்வித்துறை உறுதி..

சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் வினாத்தாள் சர்ச்சை தொடர்பாக தவறிழைத்தோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று உயர்கல்வித்துறை உறுதியளித்துள்ளது..

சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் நடந்த முதுகலை வரலாறு மாணவர்களுக்கான இரண்டாவது செமஸ்டர் தேர்வில், தமிழகத்தில் எது தாழ்ந்த சாதி? என்கிற கேள்வி கேட்கப்பட்டுள்ளது. செமஸ்டர் தேர்வில் கேட்கப்பட்ட இந்த கேள்வியால் பெரும் சர்ச்சை ஏற்பட்டுள்ள நிலையில், பல்வேறு கட்சி தலைவர்களும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்..

இதனிடையே, பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் இதுகுறித்து விளக்கம் அளித்துள்ளார். வினாத்தாள்கள் வெளிக்கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் உள்ள பேராசிரியர்கள் மூலம் தயாரிக்கப்படுவதாகவும் வினாத்தாள்களை சரிபார்த்தால் கசிந்துவிடும் என்பதால், முன்கூட்டியே வினாத்தாள்களை படிப்பதில்லை என்றும் கூறியுள்ளார். மேலும் அவர், இந்த கேள்வி குறித்து உரிய ஆய்வு மேற்கொள்ளப்பட்டு மறு தேர்வு குறித்து பரிசீலிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் வினாத்தாள் சர்ச்சை தொடர்பாக தவறிழைத்தோர் மீது நடவடிகை எடுக்கப்படும் என்று உயர்கல்வித்துறை உறுதியளித்துள்ளது.. உயர்கல்வித்துறை இதுகுறித்து, சேலம் பெரியார் பல்கலைக்கழக் தேர்வில் சாதி தொடர்பாக கேட்கப்பட்ட கேள்வி தொடர்பாக உயர்கல்வித்துறையின் உயர் அலுவலர் தலைமையில் குழு அமைத்து உரிய விசாரணை மேற்கொள்ளப்படும்.. அந்த விசாரணையின் அடிப்படையில் தவறு செய்தவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளது..

Maha

Next Post

1985 ஏர் இந்தியா குண்டுவெடிப்பு வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்ட ரிபுத் மன் சிங்.. மர்மநபர்களால் சுட்டுக்கொலை..

Fri Jul 15 , 2022
1985 ஏர் இந்தியா குண்டுவெடிப்பில் இருந்து விடுவிக்கப்பட்ட கனடாவைச் சேர்ந்த சீக்கிய தலைவரும் தொழிலதிபருமான ரிபுத் மன் சிங் மாலிக் கனடாவில் சுட்டுக் கொல்லப்பட்டதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்தனர். 1985 ஆம் வருடம் ஏர் இந்திய விமானம் கனிஷ்கா குண்டு வைத்து தகர்க்கப்பட்டது. இதில் 325 பயணிகள் உயிரிழந்தனர்.. இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்ட ரிபுத் மன் சிங், வழக்கின் முடிவில் குற்றம் நிரூபிக்கப்படாததால் விடுவிக்கப்பட்டார். எனினும் […]

You May Like