ஊக்கமருந்து பயன்படுத்தியதாக தமிழகத்தைச் சேர்ந்த தனலட்சுமி, இந்திய அணியில் இருந்து நீக்கப்பட்டார்.
தமிழகத்தைச் சேர்ந்த தனலட்சுமி, கர்நாடகாவைச் சேர்ந்த ஐஸ்வர்யா பாபு ஆகியோர் ஊக்க மருந்து பயன்படுத்தியது கண்டுபிடிக்கப்பட்டதால், காமன்வெல்த் போட்டிக்கான இந்திய அணியில் இருந்து நீக்கப்பட்டனர். பர்மிங்காமில் நடைபெற உள்ள காமன்வெல்த் விளையாட்டில் தனலட்சுமி 100 மீட்டர் ஓட்டம், 4×100மீட்டர் தொடர் ஓட்டம் ஆகியவற்றில் கலந்து கொள்ள இருந்தார். வரும் 28ஆம் தேதி போட்டிகள் தொடங்க இருக்கும் நிலையில், தனலட்சுமிக்கு வெளிநாட்டில் உலக தடகள அமைப்பு நடத்திய சோதனையில் அவர், ஊக்க மருந்தை பயன்படுத்தியது கண்டுபிடிக்கப்பட்டது.

மேலும், டிரிப்பிள் ஜம்ப் வீராங்கனையான ஐஸ்வர்யா, கடந்த ஜூன் மாதம் சென்னையில் நடைபெற்ற தேசிய சீனியர் தடகள சாம்பியன்ஷிப்பில் பங்கேற்றார். அப்போது, தேசிய ஊக்கமருந்து தடுப்பு முகமை ஐஸ்வர்யாவிடம் நடத்திய சோதனையில், அவர் ஊக்க மருந்தை பயன்படுத்தியது அம்பலமானது. இதையடுத்து, தனலட்சுமியும், ஐஸ்வர்யா பாபுவும் காமன்வெல்த் விளையாட்டுக்கான இந்தியக் குழுவில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்.