அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நாளை டெல்லி செல்ல உள்ளார்.
குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தின் பதவிக்காலம் ஜூலை 24ஆம் தேதியுடன் நிறைவடைகிறது. இதையடுத்து, நாட்டின் அடுத்த ஜனாதிபதியை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் கடந்த 18ஆம் தேதி நடந்து முடிந்தது. இதில், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் திரவுபதி முர்முவும், எதிர்க்கட்சிகள் சார்பில் யஷ்வந்த் சின்ஹாவும் போட்டியிட்டனர். ஜனாதிபதி தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்படுகின்றன. அதன்மூலம் நாட்டின் அடுத்த ஜனாதிபதி யார் என்பது தெரிந்துவிடும்.

இந்நிலையில் அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நாளை டெல்லி செல்கிறார். குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தின் பிரிவு உபசார விழாவில் பங்கேற்க உள்ளதாக கூறப்படுகிறது. மேலும், டெல்லியில் பாஜக-வின் முக்கிய தலைவர்களை எடப்பாடி பழனிசாமி சந்திக்க உள்ளதாகவும் தகவல் தெரிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.