செக்-இன் கவுண்டர்களில் போர்டிங் பாஸ் வழங்கும் போது பயணிகளுக்கு, விமான நிறுவனங்கள் கூடுதல் கட்டணம் விதிக்க கூடாது என்று சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகம் தெரிவித்துள்ளது.
தற்போது, சில விமான நிறுவனங்கள், இணையதளத்தில் செக்-இன் செய்யாவிட்டால் போர்டிங் பாஸ் வழங்குவதற்கு கூடுதலாக ரூ.200 வசூலிக்கின்றன. இந்நிலையில் இந்த கூடுதல் கட்டணத்தை வசூலிக்க கூடாது என்று மத்திய அரச்ய் தெரிவித்துள்ளது.. இதுகுறித்து விமான போக்குவரத்து அமைச்சகத்தின் ட்விட்டர் பதிவில் “ பயணிகளிடமிருந்து போர்டிங் பாஸ்களை வழங்குவதற்கு விமான நிறுவனங்கள் கூடுதல் தொகையை வசூலிக்கின்றன என்பது சிவில் விமான போக்குவரத்து அமைச்சகத்தின் கவனத்திற்கு வந்துள்ளது..
இந்த கூடுதல் தொகை அறிவுறுத்தல்களின் அறிவுறுத்தலின் படி இல்லை. விமான நிலைய செக்-இன் கவுன்டர்களில் போர்டிங் பாஸ் வழங்குவதற்கு கூடுதல் தொகையை வசூலிக்க வேண்டாம் என்று விமான நிறுவனங்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது.. ஏனெனில் விமான விதிகளின் விதி 135 இன் கீழ் வழங்கப்பட்டுள்ள ‘கட்டணத்தில்’ இதை கருத்தில் கொள்ள முடியாது..” என்று தெரிவித்துள்ளது..