fbpx

இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதும் ஒருநாள் கிரிக்கெட் போட்டி இன்று தொடக்கம்..!

இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதும் முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி இன்று தொடங்குகிறது.

வெஸ்ட் இண்டீசில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 3 ஒருநாள் மற்றும் 5 டி20 போட்டிகளில் விளையாட உள்ளது. ஒரு நாள் போட்டிகள் 22, 24 மற்றும் 27ஆம் தேதிகளில் நடக்கிறது. இந்த போட்டிகள் டிரினிடாட்டின் போர்ட் ஆப் ஸ்பெயினில் உள்ள குயின்ஸ் பார்க் ஓவல் மைதானத்தில் நடைபெற இருக்கிறது. அதன்படி முதல் ஒருநாள் போட்டி இன்று தொடங்குகிறது.

இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதும் ஒருநாள் கிரிக்கெட் போட்டி இன்று தொடக்கம்..!

ஒரு நாள் போட்டியில் இந்திய அணியில், ஷிகர்தவான் (கேப்டன்), ரவீந்திர ஜடேஜா (துணை கேப்டன்), சஞ்சு சாம்சன் மற்றும் இஷான் கிஷான் விக்கெட் கீப்பர்களாகவும் அறிவிக்கப்பட்டுள்ளனர். சூர்யகுமார் யாதவ், ஷ்ரேயாஸ் ஐயர், ருதுராஜ் கெய்வாட், ஷுப்மன் கில், தீபக் ஹூடா, ஷர்துல் தாக்கூர், யுஸ்வேந்திர சாஹல், அக்சர் படேல், முகமது சிராஜ், அவேஷ் கான், பிரசித் கிருஷ்ணா, அர்ஷ்தீப் சிங் ஆகியோரும் அணியில் இடம் பெற்றுள்ளனர்.

இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதும் ஒருநாள் கிரிக்கெட் போட்டி இன்று தொடக்கம்..!

வெஸ்ட் இண்டீல் அணியில், நிக்கோலஸ் பூரன் (கேப்டன்), ஷாய் ஹோப் (துணை கேப்டன்), கைல் மேயர்ஸ், குடகேஷ் மோட்டி, ஷமர் ப்ரூக்ஸ், கீசி கார்டி, ஜேசன் ஹோல்டர், அகேல் ஹொசைன், அல்ஜாரி ஜோசப், பிராண்டன் கிங், கீமோ பால், ரோவ்மேன் பவல், ஜெய்டன் சீல்ஸ் – ரிசர்வ்ஸ் – ரோமரியோ ஷெஃபர்ட் , ஹேடன் வால்ஷ் ஜூனியர் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

ஒரு நாள் போட்டியை தொடர்ந்து 5 டி20 போட்டிகளில் இந்திய அணி விளையாடுகிறது. இந்த டி20 போட்டிகள் வரும் 29ஆம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 7ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. அதன்படி முதல் டி20 போட்டி 29ஆம் தேதி பிரைன் லாரா மைதானத்திலும், 2வது மற்றும் 3வது டி20 போட்டிகள் ஆகஸ்ட் 1ஆம் தேதி வார்னர் பார்க் மைதனாத்திலும், 4 மற்றும் 5வது டி20 போட்டிகள் சென்ட்ரல் ப்ரோவாடு ரீஜினல் பார்க் மைதானத்திலும் நடைபெற இருக்கிறது.

Chella

Next Post

சிபிஎஸ்இ 12-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் : திருவனந்தபுரம் மண்டலம் முதலிடம்.. சென்னைக்கு எந்த இடம்..?

Fri Jul 22 , 2022
சிபிஎஸ்இ 12-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று வெளியானது.. 2021- 22 ஆம் கல்வியாண்டிற்கான 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ஏப்ரல் 26 தேதி முதல் மே 24 ஆம் தேதி வரை நடைபெற்றது. அதே போல் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ஏப்ரல் 26 ஆம் தேதி தொடங்கி ஜூன் 15 ஆம் தேதி வரை நடைபெற்றது. 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் தேர்ச்சி பெற […]
மாணவர்களே மிக கவனம்..!! பணம் பறிபோகும் அபாயம்..!! இந்த இணையதளத்தில் யாரும் இதை செய்யாதீங்க..!!

You May Like