fbpx

ஒரே நாடு ஒரே தேர்தல்; மத்திய அரசு தீவிரம்.. செயல்படுத்த இறங்கியது சட்ட ஆணையம்..!

டெல்லி, கடும் எதிர்ப்புக்கு மத்தியில் ஒரே நாடு ஒரே தேர்தல்‌திட்டத்தை நடைமுறை படுத்த மத்திய அரசு தீவிரம்காட்டி வருகிறது. இது தொடர்பான நடைமுறை, சாத்தியக்கூறுகளை ஆய்வு செய்வதற்காக நாடாளுமன்ற குழுவின் அறிக்கையை சட்ட ஆணையத்திற்கு மத்திய அரசு அனுப்பியுள்ளது. இது தொடர்பாக மக்களவையில் நாடாளுமன்ற குழுவின் அறிக்கையை உதாரணம் காட்டி சட்ட அமைச்சர் கிரண் ரிஜிஜு எழுத்துபூர்வமாக பதில் அளித்துள்ளார். நாட்டில் அடிக்கடி தேர்தல்களை நடத்துவதால் மக்களின் இயல்பு வாழ்க்கையும், அத்தியாவசிய தேவையும் பாதிக்கப்படுவதாக குறிப்பிட்டுள்ளார்.

மக்களவை தேர்தல் செலவுகளை மத்திய அரசும், சட்டமன்ற தேர்தல் செலவுகளை மாநில அரசும் ஏற்பதாக கூறிய அவர், 2014-ல் இருந்து 2022 வரை 50 சட்டமன்ற தேர்தல்கள் நடத்தப்பட்டுள்ளதாக தெரிவித்தார். ஒரேநேரத்தில் நாடாளுமன்றத்துக்கும், சட்டமன்றங்களுக்கும் தேர்தல் நடத்தப்பட்டால், தேர்தல் செலவுகள் பெருமளவு குறையும் என்றும் செலவுகளை 50:50 என்ற விகிதத்தில் மத்திய அரசும், மாநில அரசுகளும் பிரித்துக் கொள்ளலாம் என்றும் அவர் குறிப்பிட்டார். ஒரே நேரத்தில் தேர்தலை நடத்துவது தொடர்பாக நாடாளுமன்ற குழு ஆய்வு செய்திருப்பதுடன் தேர்தல் ஆணையம் போன்ற பல்வேறு தரப்பினருடன் ஆலோசனை நடத்தி வருவதாக அவர் கூறினார்.

ஒரே நேரத்தில் தேர்தலை நடத்துவதற்கான நடைமுறை சாத்தியக்கூறுகள் எவ்வாறு உள்ளன என மேலதிக ஆய்வு நடத்துவதற்காக நாடாளுமன்ற குழு சட்ட ஆணையத்திற்கு பரிந்துரை செய்துள்ளதாகவும் அவர் கூறினார். 21வது சட்ட ஆணையம், தனது வரைவு அறிக்கையில், நாடாளுமன்றத்துக்கும், சட்டமன்றங்களுக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த வேண்டிய சூழல் உருவாகியுள்ளது என்று உறுதியாக நம்புவதாக கூறினார். நாடு தொடர்ந்து தேர்தல்களை சந்திப்பதை தடுப்பதற்கான தீர்வாக, ஒரே நேரத்தில் தேர்தல் அமையும் என்று அந்த வரைவு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

Rupa

Next Post

மீண்டும் வேகமாக பரவும் தக்காளி காய்ச்சல் : என்னென்ன அறிகுறிகள்..? என்ன சிகிச்சை..?

Sat Jul 23 , 2022
ஒருபுறம் கொரோனா வைரஸ் மறுபுறம் குரங்கு அம்மை என கேரள மாநிலம் பல்வேறு நோய்களை எதிர்த்து போராடி வரும் சூழலில் தக்காளி காய்ச்சல் பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து கொண்டே வருகிறது.. அம்மாநிலத்தின் கொல்லம் மாவட்டத்தில் இந்த ஆண்டு மே மாதத்தில் இருந்து 80க்கும் மேற்பட்ட குழந்தைகள் வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர்.. இந்நிலையில் பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டதன் விளைவாக தக்காளி காய்ச்சல் பாதிப்பு எண்ணிக்கை அதிகரிப்பதாக அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர். இந்த நோய் […]

You May Like