fbpx

அதிர்ச்சி..!! இரண்டு வருடங்களாக வீட்டுக்குள்ளேயே கிடந்த பெண் சடலம்..! எலும்புக்கூடாக மீட்பு..!

லண்டன் குடியிருப்பில் ஷீலா செலியோன் (58) என்ற பெண், சுமார் 2 ஆண்டுகளுக்கு முன்பே இறந்த நிலையில், தற்போது அவரது வீட்டிலிருந்து எலும்புக்கூடாக கண்டெடுக்கப்பட்டுள்ளார்.

லண்டனில் ஷீலா செலியோன் தனியாக வசித்து வந்த நிலையில், உயிரிழந்து இரண்டு வருடம் கழித்துத்தான் இந்த உண்மை வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இதுதொடர்பாக வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது. அவர் வசித்துவந்த வீட்டை வீட்டுவசதி சங்கம் நிர்வகித்து வந்தது. அவரின் ஒரு மாத வாடகை தாமதமான நிலையில் வீட்டுவசதி சங்கம் பெண்ணின் சமூக நலன்கள் பிரிவில் விண்ணப்பித்து அவரின் வாடகையை இரண்டு வருடங்களுக்கு மேலாகப் பெற்றுள்ளனர். ஜூன் 2020இல் சமையல் எரிவாயு இணைப்பைச் சோதனை செய்ய வந்தபோது அவர் பதிலளிக்காததால் இணைப்பைத் துண்டித்துள்ளனர்.

அதிர்ச்சி..!! இரண்டு வருடங்களாக வீட்டுக்குள்ளேயே கிடந்த பெண் சடலம்..! எலும்புக்கூடாக மீட்பு..!

ஆனால், ஒருவரும் வீட்டினுள் சென்று பார்க்கவில்லை. பிரேதப் பரிசோதனை செய்யமுடியாத வகையில் உடல் அழுகிவிட்டதாக கூறப்படுகிறது. அவரின் பற்களைக் கொண்டு அடையாளம் உறுதிப்படுத்தப்பட்டது. மேலும், இறந்த காலத்தைக் கண்டறிய விசாரணை நடத்தியதில், கடைசியாக ஆகஸ்ட் 2019இல் மருத்துவமனைக்கு தொடர்புகொண்டு சிகிச்சைக்கு முன்பதிவு செய்தது தெரியவந்தது. குளிர்சாதனப் பெட்டியிலிருந்த உணவுப் பொருட்கள், அவரின் மருந்துகள், கடைசியாக அவரே செலுத்திய வாடகை போன்றவற்றை வைத்து அவர் ஆகஸ்ட் 2019 இல் இறந்துள்ளார் என்று உறுதிப்படுத்தப்பட்டது. ஒருவர் இறந்து இரண்டு வருடத்திற்கு மேலாகிக் கண்டுபிடித்திருப்பது என்பதை ஏற்றுக்கொள்வதற்குக் கடினமாக உள்ளது என்று அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவத்திற்காக வீட்டுவசதி சங்கம் மன்னிப்பு கோரியுள்ளது.

Chella

Next Post

பெண்களே... ரயில் பயணத்தின் போது உங்கள் பாதுகாப்பு இல்லையா...? உடனே இந்த எண்ணுக்கு கால் செய்யவும்...

Sun Jul 24 , 2022
காவல்துறை, பொது ஒழுங்கு ஆகியவை இந்திய அரசியல் சாசனத்தில் 7-வது அட்டவணையின் கீழ், மாநிலங்களின் கீழ் வருகிறது. அதனால் சட்டம், ஒழுங்கைப் பராமரித்தல், குற்றச்செயல்கள் குறித்த புலன்விசாரணை, பதிவு செய்தல், கைது நடவடிக்கை, தடுப்பு நடவடிக்கைகள் ஆகியவை மாநில அரசுகளின் பொறுப்பாகும். ரயில்வே காவல்துறை போன்ற சட்ட அமலாக்க முகமைகளின் வழியாக பாதுகாப்பை ரயில்வே பராமரித்து வருகிறது. ரயில்வே பாதுகாப்புப் படை பயணிகளின் பாதுகாப்பில் தனிக் கவனம் செலுத்தி வருகிறது. […]

You May Like