fbpx

எடப்பாடிக்கு எதிரான டெண்டர் முறைகேடு வழக்கு..! உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சொன்ன முக்கிய தகவல்..!

முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான டெண்டர் முறைகேடு தொடர்பான வழக்கில் லஞ்ச ஒழிப்புத்துறை சார்பில் உச்சநீதிமன்றத்தில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

எடப்பாடி பழனிசாமி நெடுஞ்சாலைத்துறை ஒப்பந்தங்களை உறவினர்கள், நண்பர்களுக்கு சட்டவிரோதமாக வழங்கி ரூ.4,800 கோடி அளவுக்கு முறைகேட்டில் ஈடுபட்டதாக கடந்த 2018ஆம் ஆண்டு திமுகவைச் சேர்ந்த ஆர்.எஸ்.பாரதி சென்னை லஞ்ச ஒழிப்புத்துறையிடம் புகார் அளித்தார். இதையடுத்து, புகார் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், இந்த புகார் தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தலாம் என்றும் தேவைப்படும் பட்சத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக வழக்கு பதிவு செய்யலாம் என்றும் கூறியிருந்தது.

எடப்பாடிக்கு எதிரான டெண்டர் முறைகேடு வழக்கு..! உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சொன்ன முக்கிய தகவல்..!

இதை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி சார்பிலும், லஞ்ச ஒழிப்புத்துறை சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கும் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டதோடு நிலுவையில் இருந்து வருகிறது. இந்நிலையில், இந்த வழக்கை விரைவாக விசாரிக்குமாறு தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை சார்பில் இன்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு முறையிடப்பட்டது. வழக்கு விசாரணை தொடர்பான தேதி எதுவும் தெரிவிக்க முடியாது எனவும் அதே நேரத்தில் வழக்கு விசாரணைக்காக பட்டியலிடப்படும் எனவும் தலைமை நீதிபதி தெரிவித்தார்.

Chella

Next Post

திருவள்ளூர் மாணவி தற்கொலை.. சிபிசிஐடி விசாரணை தொடக்கம்...

Mon Jul 25 , 2022
தமிழகத்தில் பள்ளி மாணவிகள் தற்கொலை என்பது தொடர் கதையாகி வருகிறது.. கடந்த 13-ம் தேதி கள்ளக்குறிச்சி தனியார் பள்ளி மாணவி ஸ்ரீமதி மர்ம மரணம் குறித்த பரபரப்பு அடங்குவதற்குள் தற்போது மற்றொரு பள்ளி மாணவி உயிரிழந்துள்ளார்.. திருவள்ளூர் அருகில் உள்ள கீழச்சேரி ஊராட்சியில் தெக்கலூர் பகுதியைச் சேர்ந்த மாணவி, கீழச்சேரியில் செயல்படும் ஒரு அரசு உதவிபெறும் பள்ளி ஹாஸ்டலில் தங்கி 12-ஆம் வகுப்பு படித்து மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து […]

You May Like