தமிழகத்தில் பள்ளி மாணவிகள் தற்கொலை என்பது தொடர் கதையாகி வருகிறது.. கடந்த 13-ம் தேதி கள்ளக்குறிச்சி தனியார் பள்ளி மாணவி ஸ்ரீமதி மர்ம மரணம் குறித்த பரபரப்பு அடங்குவதற்குள் தற்போது மற்றொரு பள்ளி மாணவி உயிரிழந்துள்ளார்.. திருவள்ளூர் அருகில் உள்ள கீழச்சேரி ஊராட்சியில் தெக்கலூர் பகுதியைச் சேர்ந்த மாணவி, கீழச்சேரியில் செயல்படும் ஒரு அரசு உதவிபெறும் பள்ளி ஹாஸ்டலில் தங்கி 12-ஆம் வகுப்பு படித்து மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்படுகிறது.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் மாணவியின் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்விற்காக திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இது பற்றி பள்ளி நிர்வாகம் முறையாக தகவல் தெரிவிக்கவில்லை என்று கூறி மாணவியின் உறவினர்கள் கீழச்சேரி பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் உயர்நீதிமன்ற அறிவுறத்தலின் பேரில் இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது.. விசாரணை அதிகாரியாக திரிபுர சுந்தரி தலைமையிலான குழுவினர் விசாரணையை தொடங்கி உள்ளனர்.. அதன்படி உயிரிழந்த மாணவி அப்டித்த பள்ளி, மற்றும் தங்கியிருந்த விடுதியில் விசாரணை நடைபெற்று வருகிறது..